மேற்படி செய்தியின் உண்மை நிலை பற்றிய எனது கமெண்ட்டிற்கு நீங்கள் பதில் எழுதியுள்ளீர்கள். நீங்கள்தான் இந்த இணையதளத்தின் ஆசிரியரா? இந்தக் கட்டுரையை பிற்கால பதிவுக்காக நீங்கள்தான் வெளியிட்டீர்களோ?
அமாவாசை அன்று பிறையை சர்வசாதாரணமாக புறக்கண்களால் பொதுவாகக் காணலாம் என்பது தவறான செய்தியாகும். உங்கள் பதிவில் DANJON Limit பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். வெற்றுத் தத்துவங்களும், அனுமானங்களும் மார்க்க ஆதாரமாகாது. கருதுகோள்கள் காலத்தால் மாறுபடுபவை.
சில தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள். தொலை நோக்கிகள் மூலம் பிறையை பார்ப்பதும், புறக்கண்களால் பிறையை பார்ப்பதும் ஒன்றே என்பது உங்கள் இணையதளத்தின் நிலைப்பாடு என்றால் அதை முதலில் மக்களுக்குத் தெளிவு படுத்துங்கள்.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அறிவும், பிறைகள் பற்றிய ஞானமும் அற்றவர்களின் தகவல்களை நம்புவதை முதலில் நீங்கள் கைவிடுங்கள். குர்ஆன் சுன்னா கூறும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையை நோக்கி உங்களின் பயணத்தை துவங்க முயலுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
நீங்கள்தான் இந்த இணையதளத்தை நடத்துபவராக இருந்தால், நீங்கள் எழுதியுள்ள வரிகளை கொஞ்சம் படியுங்கள்.
//காலை, மதியம், இரவு என ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அமாவாசை நிகழ்வது இல்லை என்பதை இதன்மூலம் அறியலாம்.// என்று எழுதியுள்ளீர்கள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை நடைபெறும் பகுதியின் நேரம் நன்பகலாகத்தான் இருக்கும் என்ற விஞ்ஞான உண்மையை மறைத்துள்ளீர்களா? மறந்துள்ளீர்களா? அல்லது அதுபற்றிய ஞானம் உங்களுக்கில்லையா?
அமாவாசை நிகழ்வை அறிவியில் ஆய்வாளர்கள் உலக நேரத்தில் குறிப்பிடுகையில் அதை அவரவர்களின் லோக்கல் நேரத்திற்கு (Local Time) மாற்றி அமைத்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது ஏன்?
ஜூம்ஆ தொழுகையை அமெரிக்க மக்கள் வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் ஜூம்ஆ வக்தில் தொழும் போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிழக்கத்திய நாடுகள் சனிக்கிழமையாக விடிந்து விடும். அதனால் சனிக்கிழமைதான் அமெரிக்க மக்கள் ஜூம்ஆ தொழுகிறார்கள் என்று சொல்வீர்களா?
//நாளை (ஜனவரி 30), இங்கிலாந்து நேரப்படி இரவு 09:38 மணியளவில், அமாவாசை நிகழ்கிறது. நாளை அதிகாலை, சூரியன் உதயத்திற்கு முன்னர், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உட்பட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் - தேயும் பிறையைக் காணலாம்.// என்றும் எழுதியுள்ளீர்கள். நீங்கள் கூறியுள்ளபடி அமாவாசை அன்று தேய்பிறை (Waning Crescent) புறக்கண்களுக்கு எங்கும் தென்படவில்லை.
எனவே உங்களின் கணிப்பு தவறு என 100% நிரூபனமாகி விட்டது. இதை நீங்கள் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வெட்கப்படுவதேன்?
குர்ஆன் சுன்னா ஒளியில் பிறைகளைப் பற்றிய விஞ்ஞான உண்மைகளைத் துல்லியமாக அறிந்து கொள்ள ஹிஜ்ரி கமிட்டி உங்களையும் அழைக்கிறது.
Contact me at:
Muhammed Zubair.
Address : 160/101. North Main Road,
Eruvadi. Tamil Nadu (INDIA).
PIN : 627103.
Mbl : 0091 9500 794 544.
Visit : www.mooncalendar.in
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross