Re:... posted bySalih (Chennai)[02 February 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32961
சகோதரர் சிராஜ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜனவரி 30 அன்று ஈரானில் அலிரெசா மெஹரானி என்பவரால் - அமாவாசை தினமான அன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 6:15 மணிக்கு (UTC
02:45) தேயும் பிறை வெறுங்கண்ணாலும், இருகண்நோக்கியாலும் காணப்பட்டது. அலிரெசா ஒரு வானியல் வல்லுநர். ஈரான் நாட்டின் மூன்றாவது
பெரிய நகரமான, இஸபஹான் நகரில் உள்ள அதிப் வானவியல் சங்கத்தின் தலைவர். ICOProject, Moonsighting உட்பட பல தளங்களுக்கு பிறை
தகவலை வழங்கிவருபவர்.
பல ஆயிரம் மைல் தூரத்தில் உள்ள ஈரான் நாட்டில் வாழும் அவர், ஜோர்டான் நாட்டில் இருந்து பராமரிக்கப்படும் உலகளவில் பிரசித்தி பெற்ற IcoProject.org என்ற
இணையதளத்தில், இந்தியாவில் இருந்து பராமரிக்கப்படும் காயல்பட்டணம்.காம் என்ற இணையதளம் வெளியிட்ட செய்தி ஒன்றுக்கு தோதுவாக,
பார்க்காத பிறையை ஏன் பார்த்ததாக செய்தி வெளியிடுகிறார் (அதுவும் புகைப்படத்துடன்!) என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை :-(
தங்களின் இந்த கருத்து பதிவு பழைய சம்பவம் ஒன்றினை நினைவுக்கு கொண்டுவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் அமாவாசை அன்று தேயும் பிறையை காண வாய்ப்பு இருந்தது. அவ்வேளையில்
அந்நகரில் உள்ள கஸ்ஸாலி மையத்தின் தலைவர் அப்ரோஸ் அலியை தொடர்புக்கொண்டு அன்றைய தினம் தேயும் பிறை தென்பட்டால் தகவல்
தரும்படி கேட்டிருந்தேன். தானும், வேறு சிலரும் அன்று தேயும் பிறையை கண்டதாக அவர் பதில் அனுப்பியிருந்தார். அந்த தகவலை ஹிஜ்ரா
குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அலி மானிக்பன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அத்தகவலை ஏற்றுக்கொள்ளாத அவர்,
புகைப்படம் வேண்டும் என்றார்.
சில மாதங்களுக்கு முன்னர் - தஹீடி நாட்டில், அமாவாசை அன்று, வளரும் பிறை காட்சியளித்தது. பிறை சம்பந்தப்பட்ட பல இணையதளங்களில்
புகைப்படத்துடன் அது வெளிவந்தது. அதனையும் ஹிஜ்ரா குழு ஏற்றுக்கொள்ளவில்லை. அது குறித்து விமர்சித்த ஹிஜ்ரா குழு இணையதளம் ஒன்று,
ஒரு கிருஸ்துவர் பார்த்தப்பிறையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று கேட்டிருந்தது.
தற்போது ஷியா கொள்கையை சார்ந்த அலிரெசா மெஹரானி வழங்கிய தகவலை எப்படி ஏற்றுக்கொள்வது என்று வினவப்பட்டுள்ளது :-)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross