நெஞ்சறிந்து பொய்யற்க! posted bykavimagan (dubai)[15 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3299
நமது சமுதாயத்திற்கு கிடைத்த நன்மை, தீமைகளின் மீது பிரயாணம் செய்து கொண்டிருந்த கருத்து விவாதம், மிகவும் சாமர்த்தியமாக கருணாநிதியின் பாணியிலேயே, இன்னொரு தளத்திற்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகாலத்தில் மாத்திரம், வெறும்
இலவச திட்டங்களுக்காக தமிழகம் ஒரு லட்சம் கோடி கடன்பட்டிருக்கிறது என்பதனை மறைத்து, பொருளாதார தன்னிறைவு பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்ற ஒரு வடிகட்டிய பொய் பிரேசர் இன்ஷ்டிவ்ட் என்ற பெயரில் பரப்பப்படுகிறது.
பிரேசர்போல ஆய்வு செய்யும் ஆயிரம் ஆயிரம் இன்ஷ்டிவ்ட்கள் இருந்தாலும், நமது மத்தியதிட்டக்கமிஷனில் தமிழகத்தின் நிலை என்ன? வறுமை இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் இருக்கும் என்ற கருணாவின் பேட்டி பத்திரிகைகளில் வெளியாகி ஒருமாத காலம் கூட ஆகவில்லை.
பல ஆயிரம் கோடி ஊழல் விசாரணையில், தலைவரது மனைவி, மகள், மகளின் மனம் கவர்ந்தவர்கள், தொலைக்காட்சி அலுவலகம் இன்னும் வெளிவராத பல்வேறு நிறுவனங்கள் என்று தமிழகத்தை நாறடித்தவர்கள் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் ஆடி இருப்பார்கள் என்பது அனைத்தும், இறையருளால் ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும்.அப்போது தெரியவரும் பொருளாதார தன்னிறைவு பெற்றது தமிழகமா? அல்லது தலைவரின் குடும்பமா என்று.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross