தலையாட்டி பொம்மைகள்! posted bykavimagan (dubai)[16 March 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3302
ஆணித்தரமான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத பட்சத்தில், தனிநபர் தாக்குதலில் இறங்கிவிடுவது பலவீனர்களின்
பண்பாகும். பாவம்! அது அவர்களின் இயலாமை!! கரசேவைக்கு அ.தி.மு.க.ஆதரவு என்ற விஷமப் பிரச்சாரம் முன்வைக்கப்பட்டபோதே,
அதை அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக, பட்டவர்த்தனமாக அன்றே மறுத்துவிட்டது என்பதனை நாட்டு நடப்புகளை அவதானிப்பவர்கள் மறுக்க முடியாது. ஒரே பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் அது உண்மையும் ஆகி விடாது.
மேலும்,மு.லீக்.க்கு 10 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான். 1977 ஆம் ஆண்டு தேர்தலின்போது, வள்ளல். MGR அவர்களோடு கூட்டணி அமைத்த தாய்ச்சபையை, கருணா மீதான பற்றற்ற பாசத்தால், பத்தில் ஒன்பது தொகுதிகளில் இந்த சமுதாயம் தோற்கடித்தது. ஆனாலும், MGR அவர்கள் வென்று, முதல்வர் ஆனார் என்பதே வரலாறு.
எனது கருத்தின் எந்தப்பகுதியிலும் ஒரு பெண்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று பதிவு செய்யவே இல்லை. சாராயக்கடைகளை
தமிழகத்திற்கு அறிமுகம் செய்த கருணாநிதியை ஆதரிக்கும் எவருக்கும், மார்க்க ரீதியாக விவாதம் செய்ய எந்த அருகதையும் இல்லை என்பதே எனது பணிவான கருத்து!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross