போராடுவோம் வெற்றி பெறுவோம்! posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[06 February 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33036
அழுகின்ற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும்.
'ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்து 6 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட பிறகும், விஷயத்தில் இன்றளவும் அது விஷயத்தில் அக்கறை செலுத்தாதது ஏன் என அவரிடம் கூட்டத்தினர் கேள்வியெழுப்பினர்'.(C&P) போராட்டம் என்று அறிவித்த உடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றனர்.
காயலர்கள் என்றால் இந்த அரசு அதிகாரிகளுக்கு ஒரு இளக்காரம். எவ்வளவு தாமதம் (அடித்தாலும்) செய்தாலும் ஒன்றும் கேட்க மாட்டார்கள் என்ற ஒரு மமதை. அதை முறியடிக்கும் வகையில் மறியல் போராட்டம் என்று அறிவித்ததும், உடனே கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
வட்டாட்சியர் வாக்குறுதி அளித்தபடி, எழுத்து மூலமாக பதில் தருவார் என்று நம்புவோம். இன்னும் சில நாட்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு செய்வார்கள். அதற்கு முன்பாக இந்த வாக்குறுதி வேண்டும். இல்லையென்றால், தேர்தல் அறிவிப்பு செய்து விட்டார்கள். நாங்கள் இந்த நேரத்தில் வாக்குறுதி கொடுத்தால், அது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு முரணாக அமைந்துவிடும் என்று சொல்லி காலம் தாழ்துவார்கள்.
இதே போல் நமதூருக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு, குறிப்பாக பேருந்துகள், நமதூருக்குள் வராமல் மாற்று பாதையில் செல்லுவதால் ஏற்படும் சிரமத்திர்காகவும் நாம் போராட்டம் நடத்த வேண்டும். இப்போது இருக்கும் சூழலில் எந்த கோரிக்கையும் போராட்டம் நடத்தாமல் நிறைவேறாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross