தவறாது கலந்து கொள்ளுங்கள்... உங்கள் குறைகள் அனைத்தையும் பதிவு செய்யுங்கள்...! நகரில் மிக பெரிய மோசடிகள் இதன் மூலம் தவிர்க்கலாம்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[08 February 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 33053
பிப். 15 அன்று எரிவாயு உருளை பயனாளிகள் குறைகேட்புக் கூட்டத்திற்கு வர இருக்கும் சகோதர / சகோதிரிகளே.. இந்த (மாதிரி மனு) இந்த மனு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எனது நண்பர் (கேஸ் பெற காலதாமதம் ஏற்ப்பட்டு மனு எழுதிய நபர்) மூலம் பெற்று இதை பதிகின்றேன்.. உங்களுக்கும் இது பயன் அளிக்கட்டுமாக... இன்ஷா அல்லாஹ்...
பெறுனர்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
தூத்துக்குடி மாவட்டம்
அனுப்புனர்.
ஐயா.
பொருள்: xxxxxxx xxxxxx கேஸ் ஏஜென்சியிடமிருந்து முறையான தீர்வு வேண்டி கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிராமம் கதவு எண்.____ - _____________ தெருவில் எங்களது சொந்த வீட்டில் / வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்கள் வீட்டின் சமையல் தேவைக்காக xxxx xxxx xxxx xxxx கேஸ் ஏஜென்சியிடம் கேஸ் உருளை இணைப்பு வாங்கி பல வருடங்களாக உபயோகித்து வருகிறோம் தற்போது மேற்படி ஏஜென்சிக்கு கேஸ் தேவைக்கு தொலைபேசி மூலம் முயற்சி செய்தால் தொலைபேசி எடுப்பதில்லை. ஆகையால் மன உளைச்சலுக்கு ஆளாகி பேருந்து ஏறி சென்று நேரில் கேஸ் பதிவு செய்தாலும் சரியான முறையில் எங்களின் தேவைகேற்ப நேரத்தில் சப்ளை செய்வதுமில்லை.
(இணைப்பை பெற்றவர் இறந்து இருந்தால் மட்டும்) மேலும் இணைப்பை பெற்று இருந்த எங்கள் வீட்டின் நபர் சில ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்து விட்டபடியால் அவரின் பெயரில் இருந்த இணைப்பை எங்கள் குடும்பத்தில் வேறு ஒருவர் பெயரில் மாற்றி கொள்ள விதிமுறைகள் கேட்டால் சரியான பதிலும் விளக்கமும் xxxx கேஸ் ஏஜென்சி எங்களுக்கு அளிப்பதில்லை.
1) மறுநிரப்புதல் பதிவு செய்த பின்னும் எரிவாய் உருளை எங்கள் வீட்டின் சமையில் தேவைக்கு அனுப்பவதில்லை .
2) நாங்கள் மறுநிரப்புதல் முன் பதிவு செய்திருந்த கேஸ் சிலிண்டரை எங்கள் வீட்டிற்கு அனுப்பாமலே (DOOR LOCK) வீடு பூட்டி கிடந்தன என தவறான மோசடியான பதிலை பொறுப்பில்லாமல் கூறுகிறார்கள்.
3) இணைப்பு பெயர் மாற்ற தேவையான விளக்கமும் விபரமும் தருவதில்லை.
4) மேலும் 12 கிலோமீட்டர் தொலை தூரம் உள்ள xxx xxx xxx யிடமிருந்து எங்களை எங்கள் நகரிலேயே 1 கிலோமீட்டர் தூரத்தில் இயங்கும் விநியோகஸ்தரிடம் (xxx xxx) எரிவாயு உருளை சேவையை நாங்கள் விரும்பி மாற்றி கொள்ள முடியாமல் அலைக்கழிக்க படுகிறோம்.
இந்த நான்கு காரணத்தால் எங்கள் குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களும் சமையில் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்களே..! எங்களுக்கு இந்த xxxx xxxx கேஸ் ஏஜென்சியிடமிருந்து சரியான பதில் (தீர்வு) பெற்று தருமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்..
(கேஸ் இணைப்பு எண். ________ ) பெயர். ________________)
இவண்,
தங்கள் உண்மையுள்ள,
தமிழன் - முத்து இஸ்மாயில்.
Moderator: நிறுவனங்களின் பெயர்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross