சகோதரரின் குமுறலுக்கு காரணம்? posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[08 February 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33058
சகோதரர் முஹம்மத் லெப்பை அவர்களே! உங்களின் உள்ளக் குமுறல் புரிகிறது. இந்த அவல நிலைக்கு யார் காரணம்?என்று உங்கள் வார்டு உறுப்பினர், திரு.சாமி அவர்களிடம் கேளுங்கள்.
தற்போது நமது ஊர் முழுவதும் தெரு விளக்கு மாட்ட, ஒரே ஒரு நபர் தான் இருக்கிறார் என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா? 2 வருடங்களுக்கு முன்பு வரை, தெரு விளக்குகளை மாட்டியது, அந்தந்த பகுதி லைன்மேன் தான். அதனால் பிரச்சனை இன்றி உடனக்குடன் மாட்டினார்கள்.
ஆனால் இந்த 2 வருடங்களாக அவர்கள் மாட்டாமல் தனியார் வசம் அதை ஒப்படைக்க காரணம் என்ன? என்று நகர்மன்றத்துடன் தொடர்பு உடைய உங்களின் நண்பர்களிடம் கேளுங்கள். அல்லது உங்கள் பகுதி மின்வாரிய லைன்மேன் இடம் விசாரியுங்கள். விளக்கம் கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross