Re:... ஏன்? ஏன்.? ஏன்? ஏன்? posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam)[10 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33107
அஸ்ஸலாமு அலைக்கும்!
என் பால்ய நண்பன் மர்ஹூம் எஸ் க்கே அவர்களின் அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்த எஸ் .கே. ஸாலிஹ் அவர்களின் இந்த அருமையான கட்டுரை இந்த காலத்திற்கான ஒவ்வொரு கருவுற்ற பெண்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய கட்டாய கடமையாகும்.
மக்களைப் பெற்று வளர்த்து வாலிபமாக்கி என்ன பிரயோஜனத்தையும் காணவில்லை ஒரு சொல் கூட கேட்க மாட்டேங்கிறதுகளே என்று அங்கலாய்த்து சொல்லும் பெற்றோர்கள் , கீழ் வரும் , படைத்த அல்லாஹ்வின் இந்த ஒரு சொல்லாவது கேட்டிருந்தால் இந்த மாதிரி துன்பம் வரவே வராது .
இன்ஷா அல்லாஹ்
இப்னு எஸ் கே யின் கட்டுரைக்கு உரமாகவே . திருக்குர்ஆன் கூறும் ஆயத்தையும் நான் கீழே தருகிறேன் வாசித்து அமல் செய்து பயனடைந்து எங்கள் ஹக்கிலும் துஆ செய்யுங்கள்.
18:17. ( எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன் நேரான வழியில் சென்றே விடுவான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீங்கள் காண மாட்டீர்கள்.
46:15. மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து,
பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய
பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய
இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்" என்று கூறுவான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross