اللهم اغفر لها وارحمها posted byM.S.Kaja Mohideen Mahlari (Singapore)[12 February 2014] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33120
அஸ்ஸலாமு அழைக்கும் .
மர்ஹூம் பால் ஆமீனா உம்மா ஹாஜ்ஜா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலையடைந்தேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
. மிகவும் பேணுதலும் , சன்மார்க்க அறிவும் , சிறுபிள்ளைகளுக்கு குர் ஆன் கற்பிக்கும் சிறந்த ஆசிரியையாகவும் சேவை புரிந்தவர்கள் .இப்பகுதியில் சிறுவர் , சிறுமியர் எல்லோருக்கும் பால்மா லெப்பை என்றால் தெரியாத பிள்ளைகள் யாரும் இருக்க மாட்டார்கள் .
மஜ்லிஷுல் புகாரிஸ் ஷரீப் பெண்கள் பகுதியில் சிறந்த கமிட்டியாகவும் தலைவராகவும் , பொறுப்பாளராகவும் , பெண்கள் தைக்காக்கலில் எல்லா நிகழ்சிகளிலும் கலந்து சிறப்பித்து , தலைமையேற்று நடத்துபவராகவும் , எல்லோரிடத்திலும் அன்பாகவும் , சிரித்த முகத்தோடு பழகும் தன்மையும் உடையவர்கள் என்றெல்லாம் இவர்களை பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும் .
அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் மக்கள் , குடும்பத்தார்கள் , உற்றார் , உறவினர்கள் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , து ஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் . அல்லாஹ்விற்காக சப்ரு செய்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
கிருபையுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் குற்றங்கள் , குறைகள் யாவற்றையும் மன்னித்து , கப்ரில் கேள்வி கணக்கை இலேசாக்கி , ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சிறந்த இடத்தை வழங்கி , நாளை மறுமையில் அண்ணல் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் மேலான " சபா அத்தை " பெற்று அவர்களின் அருகில் குடியமர நல்லருள் புரிவானாக !!! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross