நகராட்சியில் தோண்ட தோண்ட பூதம் கிளம்புகிறது. posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[13 February 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33157
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு (அரசு அதிகாரிகள்) கொண்டாட்டம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் - குடிநீர் கட்டணத்தை நகராட்சி உயர்த்தியதை தொடர்ந்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை குடிநீர் கட்டணம் செலுத்தவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவித்தது. அதனை தொடர்ந்து குடிநீர் கட்டணம் செலுத்தாத பலரின் பாக்கி சுமார் 50 லட்சம் ரூபாய் உள்ளது). (C&P)
ஐக்கிய பேரவை அப்போது அறிவித்ததன் அடிப்படையில் தான் குடிநீர் வரிவை குறைத்தார்கள். அந்த நடவடிக்கை எடுத்த ஐக்கிய பேரவையை பாராட்டுவோம். குடிநீர் வரியை குறித்த பின்னரும் வரியை கட்டவேண்டாம் என்று சொல்லவில்லையே. வீட்டு தீர்வையை வசூலிக்கும் நகராட்சி அதிகாரிகள், இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பது ஏன்?
எங்கள் வீட்டுக்கு (குத்துக்கல் தெரு) நகராட்சி குடிநீர் வந்து 5 வருடங்கள் ஆகிறது. 3 மாதங்களுக்கு முன்பு தோண்டி சரிபார்த்தனர். தண்ணீர் விட்ட முதல் 5 நிமிடங்களுக்கு மட்டுமே அடி பைப்பில் தண்ணீர் வருகிறது (எங்கள் வீட்டில் மோட்டார் போட்டு உறியவில்லை) அதன் பின் எந்த ........களோ மோட்டார் போட்டு உறிவதனால் தண்ணீர் வருவதில்லை. இந்த மாதிரி மோட்டார் போட்டு குடிநீரை உறிந்து, அதில் குளிக்கும் ஜென்மங்களை என்ன சொல்வது?
'பொதுமக்களில் ஒருவர், தான் 2007 ம் ஆண்டிலேயே சுமார் 10,000 ரூபாய் கட்டி இணைப்பு பெற்றதாகவும், ஆனால் தனக்கு இதுவரை ரசீது வழங்கப்படவில்லைஅவ்விடத்தில் இருந்த - நிரந்தர ஊழியர் ஒருவரையும், ஒப்பந்தப்பணியாளர் ஒருவரையும் - பொது மக்கள் அடையாளம் காண்பித்துள்ளனர்.
அந்த பணியாளர்களிடம் நகர்மன்றத் தலைவர் விசாரித்ததில் - சில காரணங்களுக்காக கணினியில் பதிவேற்றம் செய்யமுடியவில்லை என்றும், விரைவில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். (C&P)
கேட்கிறவன் கேனையனாக இருந்தால், கேப்பையில் நெய் வடிகிறது என்பானாம். அதே போல் இருக்கிறது, இந்த ஊழியர் சொல்வது. 2007-ம் ஆண்டு கட்டிய தொகைக்கு, 7 வருடங்கள் கடந்த பின்னருமா கணினியில் பதிவேற்றம் பண்ணமுடியவில்லை? இந்த 7 ஆண்டுகளாக, அந்த ரூ.10,000 வை அந்த ஊழியர் என்னசெய்தார்? இதே மாதிரி எத்தனையோ? ஊரின் நன்மைக்கு யார் செய்தாலும் வரவேற்போம்.
ஊரின் அனைத்து பகுதிக்கும் திடீர் ஆய்வுக்கு (surprise checking) சென்று அங்கு இருக்கும் முறைகேடுகளையும் கண்டுபிடித்து, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். ஊராரின் (மோசடி செய்தவர்களை தவிர) ஆதரவு உங்களுக்கு இருக்கும்
அடுத்தது, குடிநீரின் அளவினை கணிக்கிட அளவு கருவி பொறுத்த டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் அளித்த பதில், யாரோ சொல்லி தாமதம் செய்வது போல் இருக்கிறது. வருஷத்தில், தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், தமிழ் வருட பிறப்பு என்று வந்து கொண்டு தான் இருக்கும்.
அவர்கள் இந்த மாதத்துக்குள் சப்ளை செய்து பொருத்துகிறார்களா? என்று பார்போம். அப்போது தான் ஆத்தூரில் இருந்து, நமதூருக்கு விடப்படும் தண்ணீர் எங்கு திருடப்படுகிறது? என்று தெரியும். இதற்கும் நல்ல விடிவு காலம் வரும் என்று காத்திருப்போம்.
-சாளை அப்துல் ரஸ்ஸாக்.
[Administrator: Comment edited; கோரிக்கை வைக்கப்பட்டது. கட்டணம் குறைக்கப்படவில்லை. பார்க்கவும் செய்தி: http://kayalpatnam.com/shownews.asp?id=1607]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross