செய்தி: சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும், மதவாதத்தை எதிர்க்கும் கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம்: கருணாநிதி அழைப்பு! நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உன்னோடு நாங்கள் இருக்கிறோம். இல்லை,இல்லை உன்னில் நாங்கள் இருக்கிறோம்.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[17 February 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33206
திருச்சியே திக்குமுக்காடியது, மலைக்கோட்டையே சற்று மளைத்ததோடல்லாமல், தி.மு க தொண்டர்கள் வெள்ளத்தில் மூழ்கியே போய்விட்டது
திருச்சியில் அலைகடல் இல்லைதான் ஆனால் திரும்பும் திசையெங்கும் தொண்டர்களின் கட்டுக்கடங்கா மனித வெள்ளம் வீறுகொண்டு ஓராயிரம் வங்க்ககடலையும் விழுங்கி விடும் அளவிற்கு உணர்ச்சியின் ஒய்யாரம் ஓங்கி ஒலித்தது தி.மு.க வின் 10-வது மாநில மாநாட்டில்!
தமிழனத்தலைவர் கலைஞர் இதுவரை கூட்டணிப்பற்றிய நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து இறுதியாக மாநாட்டு நிறைவு உரையில் ஒரேஒரு வார்த்தையை. ஒரே ஒரு உண்மையை ஒவ்வொரு சிறுபான்மை மகனும் மகிழக்கூடிய
ஒவ்வொரு இஸ்லாமியனும், ஒவ்வொரு கிறிஸ்தவனும்,
ஒவ்வொரு தாழ்த்தப்பட்டோனும் உள்ளாம் மகிழ, அவர்களின் உரிமைகளை காத்திடும் உன்னத மொழியாகிய பொன்மொழியாம் "மதவாதத்தை எதிர்க்கும் அணி எங்கள் அணி" என்று தன் பொக்கைவாயால் பெருமை பொங்க பொழிந்ததார்.
அதோடு அல்லாமல்,எங்களின் இக்கொள்கையை ஏற்கும் எந்தக்கட்சியும் எங்கள் அணியுடன் இணையலாம்
என்ற ஒரே ஒரு ஒற்றைக்குறிக்களோடு மதவெறித் தன்மையை வேரோடு அறுத்தெறியவேண்டும் என்ற ஒரு புண்ணிய நோக்கத்தோடு அறைகூவல் விடுத்திருக்கும் அன்புதலைவனே,
நீ தொடுத்திருக்கும் இம்மதவெறி வீழ்த்தும் அறப்போரில் இலட்ச்சோப இலட்சஇஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும்,
சிறுபான்மயர்கள் முதல் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவர்களும் ஓரணியில் ஒன்றென கலந்து எங்கள் உள்ளத்தால் உறுதிபூண்டு விட்டோம். கடல்மடை திறந்த வெள்ளமாய் படைதிரண்டு உனக்கு பக்க பலமாய் இருப்போம் என்று!
உனக்கு வயதேறியதென்பது உலக கணக்கு,ஆனால் எங்களுக்கு என்றும் நீ உறுதிவாய்த்தஉரமேறியஉள்ளதுடன
துள்ளிக்குதிக்கும் காளையன் தான், எங்கள் கலைஞனே உன்னோடு நாங்கள் இருக்கிறோம். இல்லை,இல்லை உன்னில் நாங்கள் இருக்கிறோம் எள்ளளவும் பயமில்லயென பீடுநடை போடு,புதிய பாராளுமன்றத்தை படைத்திடு இப் பாரத பூமிக்கு!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross