Re:...சாணக்கியர்கள்... posted bymackie noohuthambi (chennai)[17 February 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33209
முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கு தீண்ட தகாதவர்,அரசியலில். ஆனால் மூதறிஞர் அவர்கள் ஜின்னாவை சந்திக்க வருகின்றபோது, பார்ப்பனன் வருகிறான், அந்த சட்ட நூலைக் கொஞ்சம் கொண்டுவா ஒருமுறை படித்து பாப்போம் என்று தனது குமாஸ்தாவிடம் சொல்வாராம் ஜின்னா. இருவரும் கோர்ட்டு புலிகள். ராஜாஜி அரசியல் சாணக்கியர் என்ற புகழ் பெற்றிருந்தாலும் ஜின்னா பாகிஸ்தானை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து பெற்று சென்றார். மகாத்மா என்று காந்தி அழைக்கப் பட்டாலும் ஆசியாவின் ஜோதி என்று நேரு புகழப் பட்டாலும் இவர்களாலும் அந்த பிரிவினை ஏற்படாமல் தவிர்க்க முடியவில்லை.
எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் அது தன சொந்த வாரிசுகளிடமிருந்தா அல்லது கழகத்தின் முதுகெலும்பாக இருப்பவர்களின் அரசியல் வாரிசுகளிடமிருந்தா என்பதை எல்லாம் கலைஞர் பார்ப்பதில்லை. ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று வெறுமனே பாடி செல்பவர் அல்ல கலைஞர். அதை செயலில் காட்டுவார். அதே நேரம் மறப்போம் மன்னிப்போம் - மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அண்ணா வழியில் சென்று, தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் ஆளுமையும் அரசியல் சாணக்கியமும் அவருக்கு உண்டு.
ராவணனுக்கு ஒன்பது முகமும் முருகனுக்கு ஓராறு முகமும் ஈராறு கரமும் உண்டு என்பதுபோல் கலைஞருக்கு பல முகங்களும் பல கரங்களும் உண்டு. வீணைகளை மீட்பதில் கல்யாண ராகமும் முகாரி ராகமும் அதில் கானங்களாக மாற்றி மாற்றிப் பாட வல்லவர் கலைஞர். சதுரங்க ஆட்டத்தில் ஒரு நாள் விஸ்வநாத ஆனந்தனாக விஸ்வரூபம் எடுப்பார், மறுநாள் கார்ல்சனாக மாறி விஸ்வநாத ஆனந்தனை வெற்றிகொண்டு அம்மா கரங்களால் பொற்கிழியும் பெற வல்லவர்.
நீங்கள் பிரதமராக ஆசைப் படுகிறீர்களா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு "என் உயரம் எனக்கு தெரியும்" என்று சப்தமில்லாமல் பதிலளித்து அமைதி அடைந்தார்.
என்ன தான் நீங்கள் கூட்டல் கழித்தல் போட்டு கணக்கு சொன்னாலும் "அவன் போட்ட கணக்கொன்று, இவன் போட்ட கணக்கொன்று இரண்டுமே தவறானது" என்று கலைஞர் தனக்கு என்று ஒரு தனிக் கணக்கு போட்டு வைத்திருப்பார். ஆனால் நமக்கு மேலே ஒருவன் வேறொரு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அவர் நம்ப மறுப்பதன் காரணத்தால் அவர் தடுமாறி விழுகிறார் தடம் மாறி விடுகிறார் என்பதுதான் நிதர்சன உண்மை. அதுதான் அவரது பலகீனமும் கூட..
மற்றப்படி" OUR GLORY IS NOT IN NEVER FALLING, BUT IN RISING EVERYTIME WE FALL" என்பதில் இந்த தொண்ணூறு வயது இளைஞன் உறுதியாக இருக்கிறார்.
எனவே "ஷாஜஹான் துரை அவர்களே, சற்றே விலகி இரும் பிள்ளாய்" என்று கலைஞர் உங்களுக்கு காதில் சொல்வது எனக்கு கேட்கிறது. நாளை நமதே, நாற்பதும் நமதே நாளை நடப்பதை இங்கு யார் அறிவார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross