செய்தி: பிப். 23இல் ரயில் மறியல் போராட்டம்! வீட்டுக்கு ஒருவர் என 10 ஆயிரம் பேர் திரள வேண்டும்!! அனைத்துக் கட்சிகளின் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இப்படை தோற்கின் எப்ப்டை வெல்லும்! posted bymackie noohuthambi (chennai)[18 February 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33223
அதிகாரிகளின் ஆணவ பேச்சா அல்லது ஆட்சியை இழக்கப்போகிறோம் என்ற விரக்தியின் வெளிப்பாடா, ஊழல்களின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்ட அரசு அதிகாரிகள் "புலி பதுங்குவது பாய்வதற்குதான்" என்று அறியாமல் உளறி இருக்கிறார்கள்.
23ம் திகதி நடக்கவிருக்கும் ரயில் மறியல் போராட்டம் அறுபடை வீடுகளின் நாயகன் முருகன் பழனியில் இருந்து மயிலேறி வந்து செந்தூரை அடைவானோ என்னவோ அந்த வழியாக ரயிலில் பயணம் செய்து நொந்து நூலாகி இந்த அதிகாரிகளின் கண்களை திறப்பான், அதில் பயணம் செய்யும் மக்களும் நமது நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
போராட்டம் ரயில் நிலைய வாசலோடு நிறுத்துவதற்கு இந்த அரசு முன்னேற்பாடு செய்யக் கூடும். கல்லக்குடி போராட்டம்போல் தண்டவாளத்தில் தலைவைக்கும் இளைஞர்களை மிக கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு முஸ்லிம் லீக்குக்கு உள்ளது. எந்த காரணம் கொண்டும் பெண்களையும் சிறுவர்களையும் இதில் ஈடுபடுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருச்செந்தூர் செல்லும் ரயில் காயல்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏற்பாடு செய்த ரயில் நிறுத்த போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அப்போது இப்படிதான், ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்ல விடாமல் தெருவில் நின்றே கோஷம் போட்டு விட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறி போராட்டத்தை பிசுபிசுக்க செய்து விட்டார்கள்.
10,000 பேர் என்ற இலக்கு மிகவும் பாராட்டுக்குரியது. அன்று நமதூரில் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தால் அதுவும் போராட்டத்துக்கு வலு சேர்க்கும்.நமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளு மன்ற தேர்தலில் யாருக்கும் வாக்களிப்பதில்லை என்ற நிலைப்பாடும் நல்ல பலனை தரும்.
23ம் திகதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் ரயிலில் கூட்டம் இருக்காதே, பொது மக்களுக்கு நமது போராட்டம் சென்றடைய ஒரு வேலை - நாள் (working day) அல்லது கோயில் விசேஷ நாளை தேர்ந்து எடுத்து இருக்கலாமே என்றும் மனம் விரும்புகிறது. சர்வ கட்சி அமைப்புக்கள் கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதைப் பற்றி பேச மனம் விரும்பவில்லை.
போராட்ட நாள் விடியுமுன் இந்த விவகாரத்துக்கு ஒரு விடிவு - ஒரு முடிவு வர வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross