எங்கே நீதி? posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[20 February 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33261
குண்டு வெடிக்கிறது உடல் சிதறுகிறது அய்யோ அம்மா என்ற அலறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உடல்கள் சிதறி சின்னாபின்னமாக ரத்த வெள்ளத்தில் மிதக்கின்றன.
ராஜிவ்காந்திக்கு வைத்த குறியில் கோரமாய் இறந்தவர்கள் எத்தனை அப்பாவிமக்கள். தன் கணவனை இழந்து
தன்தாலியை இழந்து,பொட்டிழந்து, பூவிழந்து பூமியில் நாதியற்று நாளைப்பொலுதை எப்படிகழிப்பதென்று நாட்களை, மாதங்களை, வருடங்களை வேதனை கண்ணீரில் கழித்துக்கொண்டிருக்கும் இல்லை கரைந்து கொண்டிருக்கும் எத்தனை குடும்பங்கள்,
அக்குடும்பங்கள் இன்றுவரை மனக்கொதிப்பின் முனைகளில் முழு வாழ்க்கைகளையும் பறிகொடுத்துவிட்டு நடமாடும் பிணமாக வாழ்கிறார்களே அவர்களை இந்த நீதியரசர்கள் காணவில்லையா?அக்கோர கொடிய கொலைதாக்குதலில்
தன் மகனை இழந்தவர்கள் எத்தனைபேர்?தன் தந்தையை இழந்தவர்கள் எத்தனைபேர்? இவர்களையெல்லாம் இந்த நீதியரசர்களுக்கு தெரியாதா?
இவ்வளவு கொடூர கொடிய காரியத்தை செய்தவர்கள் ஏதோ 23 வருடங்கள் மன உளைச்சலுடன் இருக்கிறார்களாம் அதனால் மன்னித்து விட வேண்டுமாம்! என்ன நீதி? என்ன நடுநிலைமை? என்ன சட்டம்? என்ன மனசாட்சி? நீதி அரசர்களே உங்களுக்கும் குடும்பம்,பிள்ளை குட்டிகள் இருக்கத்தானே செய்கிறது.
சரி நீங்கள் நேர்மையான நீதியரசர்கள் என்றால் உங்கள் நீதியை எல்லா இடமும்,எல்லோருக்கும் சமமாக வழங்கிடவேண்டும் பல்லாண்டு காலமாக எந்தவித விசாரணையும் இல்லாமல் கோவை முதல் பல சிறைகளில் வாடி,வதங்கி தங்கள் உடலில் உயிரை மட்டும் ஏந்தி அது எந்த நேரத்திலும் பிரிந்து விடக்கூடிய பரிதாபநிலையில் தவிக்கும் அப்பாவி முஸ்லிம்கள் உங்கள் கண்களுக்கு படவில்லையா? அடப்பாவிகளே. அப்படியென்றால் நாங்கள் இரண்டாம் தர குடிமக்களா? பக்கத்துக்கு நாட்டில்லுவர்களை விட நாங்கள் கீழ்தரமானவர்களா?கேவலமானவர்களா? நாங்கள் இந்த நாட்டில் பிறந்தது தான் குற்றமா?
நீதியரசர்கள, நீங்கள் உங்கள் கருப்பு அங்கியைஅணியும்போலுது அணுவளவாவது உங்கள் உதிரத்தின் மனச்டாட்சி உங்களை கேட்காதா? கேடுகெட்ட அரசியல் வாதிகளே உங்களுக்கு இந்த மூவரின் உயிர்தான் உலகத்திலேயே பிரதானமானதா?
எத்தனை இஸ்லாமிய உயிர்கள் இன்றுவரை இரும்பு கம்பிகளுக்குள்ளே இருக்கிறார்கள்,நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்று இன்றுவரை அவர்களுக்கும் தெரியவில்லை,அவர்களை அழைத்துவந்த அந்த அரக்கர்களுக்கும் தெரியவில்லை, அம்மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சி தலைமைக்கும் தெரியவில்லை.
தீவிரவாததிற்கு தூபமிடுபவர்கள் யார்?தீவிரவாததிற்கு
வித்தூண்டுபவர்கள் யார்? தீவிரவாதி எப்படி உருவாகிறான்?
நீதி தேவதை கண்ணை கட்டியிருப்பது நடுநிலையை குறிப்பதற்க்காகதான்.ஒருவேளை நீதியே கட்டப்படவேண்டிய ஒன்றுதான் என்ற சித்தாந்தம் தலைதூக்குமேயானால்,
அந்நீதியை தட்டிப்பறிப்பதில் தாமதம் ஏற்படாத இழி நிலை தான் இந்நாட்டில் மிஞ்சும்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross