நம்மூர் மஹ்லராவிலிருந்து ஜாமில் அஸ்ஹர் வரைக்கும், ஜலீல் முஹைதீனிலிருந்து ஹாமித் பக்ரிவரைக்கும், சென்னை IIMமிலிருந்து காயல் IIMவரைக்கும், ஒற்ற கொள்கை உடைய JAQHலிருந்து INTJவரைக்கும், முஸ்லிம் லீக்கிலிருந்து மமக வரைக்கும், டாக்டர் ஜாகிர் நாயகின் IIROவிலிருந்து தேவ்பந்து மதரஸாவரைக்கும், இன்னும் ஏன் ஸஹாபாக்களிலிருந்து ஷெக் பின்பாஸ்வரைக்கும், இப்படி பல இருந்து...வரைக்கும் என்று பல நாள் சொல்லும் அளவிற்கு விமர்சனங்களும் விவாதங்களும் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய ஒரே வலைதளம் www.tntj.net எனவே இப்படிபட்ட வலைதளத்தை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமுமுக 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது. 2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்தது. ஆனால் இரண்டுக்குமே தெளிவான காரணம் இருந்தது.
அதிமுகவை விட்டு திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் போது உங்களை போன்றவர்கள் சந்தர்ப்பவாதம் என்று சொல்லவில்லை. காரணம் உங்களைப் போன்றவர்களின் திமுக மீதான தீராத பற்று.
சென்ற திமுக ஆட்சியின் போது, முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். பாஜகவுடன் மத்தியில் ஆட்சியில் பங்கு கொண்ட திமுக, அவர்களை குளிர்விக்க தமிழக முஸ்லிம்களை திட்டம் போட்டு கைது செய்தார்கள். இல்லாத பெண்ணை தீவிரவாதி ஆயிஷா என்று வர்ணித்து நம்மூர் பெண்கள் மதராஸாவரை சோதனை என்ற பெயரில் சல்லடையிட்டார்கள். (பின்பு பத்திரிக்கையாளர்கள்தான் ஆயிஷா பெண் தீவிரவாதி என்ற நிழலை நிஜமாக்க முயற்சித்தார்கள் என்று மூத்த போலிஸ் அதிகாரி அசடு வழிந்தது தனி கதை). இந்நிலையில் சீரணி அரங்கத்தில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு நடத்தி அன்றைய எதிர்கட்சிகளை ஒறுங்கிணைத்து திமுக தோற்பதற்கு வித்திட்டார்கள்.
பின்பு வந்த ஜெ.ஜெ ஆட்சியில் அத்துமீறல்கள் நிறைவேற வேறு வழியில்லாமல் திமுகவிற்கு, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டு, 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆதரித்தார்கள்.
பிறகு தமுமுக முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு அடுத்த கட்டத்தை முயற்ச்சி செய்தார்கள். அதாவது கண்ணியமிகு காயிதே மில்லத் வழிகாட்டிய அரசியல் தனித்தன்மை. இந்த அரசியல் தன்மையை தற்போதைய முஸ்லிம் லீக் முன்னெடுத்து சென்றிருந்தால் மமக என்ற கட்சியே உறுவாகி இருக்காது.
உறவாடி கெடுக்கும் கலைஞரின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொண்டு, சென்ற பாராளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டும், அரபு நாடுகளில் ஒரு தூதுவர் பதவியும் என்று ஆசை காட்டிய பிறகும், உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மையை திமுக அழிக்க முயற்சி செய்ததால், தோற்போம் என்று தெரிந்தும், மமக தேர்தலில் தனியாக போட்டியிட்டது.
இன்று தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதித்த காரணத்தால் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
தமுமுக செய்யும் இந்த அரசியல் முடிவுகள் சமுதாயத்திற்கு நன்மை அளிக்கும் விதமாகவே அமைகிறது. தமுமுக முதலில் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட ஆரம்பித்த போது, போகாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள் என்று முஸ்லிம் கட்சிகள் கிண்டலடித்தார்கள். இடஓதுக்கீடு போராடி பெற்றவுடன், விமர்சித்தவர்கள் நாங்கள்தான் இடஒதுக்கீடு பெற காரணமானவர்கள் என்று மார்தட்டுகிறார்கள்.
அதே போல் இன்று தமுமுக, மமக என்ற அரசியல் கட்சி ஆரம்பித்து, முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மைக்காக இப்பொழுது போராடுகிறது. இதை நீங்கள் சந்தர்ப்பவாதம் என்று கொச்சைப்படுத்தினால், அந்த சந்தர்ப்பவாதத்தை மீண்டும் மீண்டும் செய்யுமாறு தமுமுக தலைமையை நான் கேட்டுக் கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross