செய்தி: நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக இசைவு! ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!! (பிரசுரம் இணைக்கப்பட்டது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆதங்கத்தை அவிழ்க்கிறேன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (yanbu)[24 February 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33321
வட்டாச்சியர் வார்த்தை ஜாலத்தை கைகொண்டு சொற்களில் சித்து விளையாட்டை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது!
ஆங்கில மொழிபெயர்ப்பு அறிக்கையை அமைத்ததில் கெட்டிக்காரத்தனத்தை கையாண்டதாக வட்டாச்சியர் நினைத்தால் அது அவரையே அவர் ஏமற்றிக்கொண்டதாகத்தான் அர்த்தம்!
நேற்றய ஒப்பந்தத்தில் ஒட்டு மொத்த மக்களுக்கு உடன்பாடில்லை. அந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டு போராட்டத்தில் குதிக்கிறோம், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, அதாவது வேலைகள் ஆரம்பிக்கும் முதல் நாள்வரை எங்கள் போராட்டம் நீடிக்கும் என்று நாம் மாற்றிப்பிடித்தால், இந்த வட்டாச்சியர் என்ன, ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகமே நம்முன் மண்டியிட வேண்டியதுவரும்!
ஆனால் நம் போராட்ட ஏற்பாட்டு குழுவிலுள்ளவர்கள் கண்ணியமானவர்கள், காயல் நகரின் நாகரீக கட்டுப்பாட்டை உணர்தவர்கள் என்ற முறையில் இந்த ஒப்பந்தத்தோடு வந்திருக்கிறார்கள் பொருந்திருந்துதான் பார்ப்போமே!
இந்த நேரத்தில் என் மனதில் தேங்கி கிடந்த ஒரு ஆதங்கத்தை தெரிவிக்க விரும்புகிறன். இதை ஏன் நான் முன்னமே சொல்லாமல் விட்டதற்க்குறிய காரணம், நமதூர் அனைத்து சகோதரர்களும் ஒட்டுமொத்தமாக,ஒற்றுமையாக,ஒருமித்த உறுதியான எண்ணத்துடன் இப் போராட்டத்தில் குதிக்க தயாராகி உணர்ச்சிப்பொங்க வரும் ஞாயிருக்காக காத்திருக்கும் இச்சமயத்தில் என்னுடைய கருத்துப்பதிவால் இமியளவும் ஒற்றுமைக்கு ஊறு ஏற்பட்டு விடக்கூடாதே என்ற ஒரு பாதுகாப்பு பதுங்கள்தான் முக்கிய காரணம்!
என் எண்ணத்தை இப்பொழுது அவிழ்க்கிறேன்!
நம்முடைய மரியாதைக்குறிய ரயில்வே இணை அமைச்சர்
E.அகமது அவர்கள் எததனை தடவை நமதூருக்குவந்தார்கள்.
கட்சி நிகழ்ச்சிக்கும்,கல்யாண நிகழ்ச்சிக்கும் கலந்து கொண்ட அவர்கள் சிறிது கண் அசைத்தாலே போதுமே நம் ரயில் நிலையத்தின் அவலம் அன்றைக்கே சரியாகி இருக்குமே!
மதிய ரயில்வே இணையமைச்சர் மான்புகிக்கு E அகமது அவர்கள் அத்தனை அதிகாரம் பெற்றவருமான நம்மின அமைச்சரல்லவா. திருவனந்தபுரத்தை சற்றுபாருங்கள்
அங்கு நம் இந்திய நாட்டின் எந்த ஊரிலும் இல்லாத அளவிற்கு அனைத்து வசதிகளும் அடங்கிய அனைத்து தொடர்வண்டிகளும் சங்கமமாகி எந்த தடங்கலும் இன்றி இயங்கி வருகிறது!
அருகிலுள்ள மாநிலத்தின் ஒர் ஊரில்,அதுவும் நம்மின மக்கள் மிகுதியாக வாழும் ஊரில்,அதுவும் தான் சார்ந்திருக்கும் கட்சியினர்கள் தம்மை உற்சாகமாக வரவேற்ற ஊரிலுள்ள
ஒரு சில குறைகளை களைந்தெறிய முடியாதா
இந்த இணையமைச்சருக்கு?
தி மு க,/அ தி மு க /காங்கிரஸ் என்ற எந்த MP முயற்சித்தாலும் இறுதில் முறையீடு மனு முட்டி மோதி நிற்க்குமிடம் ரயில்வே அமைச்சகத்திடம் தான்,அவர்கள் அசைந்தால்தான்
ஆண் பிள்ளையோ ,பெண்பிள்ளையோ பெற்றிட முடியும்!
செந்தூர் புகைவண்டியை தினந்தோறும் விடவேண்டும், புகைவண்டி நிலைய பராமரிப்பு பணிகள் செய்யப்படவேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன் வைத்து முன்னர் தா.மு மு.க அமைப்பினர்கள் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ருந்தார்கள்,அச் சமயம் இ.யூ.மு.லீக் ஒரு பிரசுரத்தை ஜிம்மா அன்று வெளியிட்டது.அதில்,நாங்கள் ரயிவே இணையமைச்சர் E அகமது அவர்களிடம் ரயில்வே சம்பந்தமாக அனைத்து கோரிக்கைகளையும் வைத்து விட்டோம்,அவரும் அனைத்து குறைகளையும் நிறைவேற்றுவதாக மக்கள் முன் உறுதி தந்துள்ளார்.ஆகவே ரயில் மறிப்பு போராட்டம் அவசியமற்றது என்று கூறி இருந்தார்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross