Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:23:20 PM
வெள்ளி | 4 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1891, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:1315:2918:1619:24
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:03
மறைவு18:07மறைவு19:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2818:5219:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13076
#KOTW13076
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 21, 2014
நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக இசைவு! ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!! (பிரசுரம் இணைக்கப்பட்டது!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4536 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக இசைவு தெரிவித்துள்ளதையடுத்து, இம்மாதம் 23ஆம் நாளன்று - காயல்பட்டினம் நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக்கமிட்டிகள் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, போராட்ட ஒருங்கிணைப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவருமான மன்னர் பாதுல் அஸ்ஹப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 23ஆம் நாளன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில் - நகரின் அனைத்து அரசியல் கட்சியிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள் சார்பில் இம்மாதம் 17ஆம் நாளன்று நடத்தப்பட்ட போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பொதுப் பிரசுரமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், போராட்டக் குழுவினரை - திருச்செந்தூர் வட்டாட்சியர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்ததன் அடிப்படையில், இம்மாதம் 20ஆம் நாள் வியாழக்கிழமை (நேற்று) மதியம் 03.30 மணியளவில், போராட்டக் குழுவினருடன் திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிப்ரவரி 21ஆம் நாள் மதியம் 03.00 மணிக்கு மீண்டும் ஒருமுறை வட்டாட்சியர் அலுவலகம் வருமாறும், அப்போது ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழியைப் பெற்றுத் தருவதாகவும் அக்கூட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் இன்று மதியம் 03.30 மணிக்கு, திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன் தலைமையில், தென்னக ரயில்வே திருநெல்வேலி மண்டல மூத்த பொறியாளர் செய்யித் முஹம்மத் யூஸுஃப், வணிக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.





போராட்ட ஒருங்கிணைப்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் தலைமையில், ரயில் மறியல் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர கிளை மூத்த தலைவர் ஹாஜி வாவு சித்தீக், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத்,

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால், துணைத்தலைவர் காயல் முத்துவாப்பா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.கோபால், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மகேஷ், பண்டாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னீர் செல்வம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் நகர தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், சமத்துவ மக்கள் கட்சியின் நகர தலைவர் அப்துல் அஜீஸ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் உட்பட, நகரின் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய போராட்டக் குழுவினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.





தென்னக ரயில்வே மதுரை மண்டல துணை மேலாளர் வி.அஜீத் குமார், வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தை போராட்டக் குழுவினரிடம் வட்டாட்சியர் கைச்சான்றிட்டு சமர்ப்பித்தார்.



கடிதத்தின் சுருக்கம் வருமாறு:-



காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கம் உள்ளிட்ட முக்கியப் பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் தொகை ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

அணுகுசாலை, பயணியர் காத்திருப்பறை, நடைமேடை மேற்கூரை உள்ளிட்ட பணிகள் ரூபாய் 40 லட்சம் செலவுக்கு செய்யப்பட்ட நிலையில், ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை தாமதமானதால் தன்னால் எஞ்சிய பணிகளை நிறைவேற்ற இயலாது என தெரிவித்துவிட்டார்.

எனவே, 18 ரயில் பெட்டிகள் நிற்கும் வகையில் நடைமேடையை விரிவாக்கல் உள்ளிட்ட நிலுவைப் பணிகளைச் செய்து முடிக்க புதிதாக ஒப்பந்தம் விடப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2014-15 நிதியாண்டில், ரயில்வே நிதிநிலையறிக்கை மூலம் கூடுதல் தொகை பெற்று, அதனடிப்படையில் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன்.


இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 23ஆம் தேதி நடத்தப்படவிருந்த ரயில் மறியல் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்து தீர்மானிக்கப்பட்டது. நிறைவில், பின்வருமாறு போராட்டக் குழுவினருடன் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டது:-




இவ்வாறு, ரயில் மறியல் போராட்ட ஒருங்கிணைப்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்


கூட்டத்தைத் தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட செய்தி பிரசுரமாக அச்சிடப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பிரசுரம் வருமாறு:-



[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 23:32 / 21.02.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒற்றுமைக்கு கிடைத்த தற்காலிக வெற்றி!
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [21 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33278

அல்ஹம்து லில்லாஹ். நமது கோரிக்கைகள் வரும் நிதியாண்டில் நிறைவேற்றப்படும் என்று பொறுப்புள்ள பதவியில் உள்ளவர்கள் தங்களது லெட்டர் பேடில் கையெழுத்து இட்டு தந்துள்ளனர். சிலர் நினைப்பது போல், இது பம்மாத்து (ஏமாற்றும்) வேலையாக இருக்காது என்று நம்புவோம். இது தற்காலிக வெற்றி தான்.

'எனவே, 18 ரயில் பெட்டிகள் நிற்கும் வகையில் நடைமேடையை விரிவாக்கல் உள்ளிட்ட நிலுவைப் பணிகளைச் செய்து முடிக்க புதிதாக ஒப்பந்தம் விடப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2014-15 நிதியாண்டில், ரயில்வே நிதிநிலையறிக்கை மூலம் கூடுதல் தொகை பெற்று, அதனடிப்படையில் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன். (C&P)

வரும் ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியை பொறுத்து, நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இந்த சமாதான ஒப்பந்தத்தில் கூட 'தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத்தான்' கூறியிருக்கிறோம்.

தாங்கள் கையழுத்து போட்டு கொடுத்த வாக்குறுதியின் படி நடக்காவிட்டால், காயலர்கள் மீண்டும் இப்போதைய வீரியத்தை விட அதிகம் கொதித்து எழுவார்கள் என்ற பயம், அதிகாரிகளை நமது கோரிக்கைகள் நிறைவேற்ற காரணமாக இருக்கும்.

இந்த இணையதளம் வெளியிட்ட 'நடைமேடையை நீட்டிப்பது காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வழங்கப்படும் சலுகையா? (பாகம் 2)' மற்றும் இந்த வாக்குறுதி அடிப்படையில், நடைமேடை நீளத்தை மட்டுமே அதிகரிப்பார்கள் என்று தெரிகிறது.

அப்படியென்றால், நடைமேடையின் உயரம் உயர்தப்படாதா? இப்போதைய தரை (தண்டவாள) உயரம் தான் இருக்குமா? முன்பு போலவே, நமது வயது முதிர்ந்தவர்களும், பெண்களும், குழந்தைகளும் ரயிலில் ஏற / இறங்க கஷ்டப்படத்தான் வேண்டுமா? நடைமேடை உயரத்தை அதிகரிக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று விபரம் அறிந்தவர்கள் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

ஜூன் முதல் வாரத்தில் அதிகாரிகளுக்கு நினைவூட்டல் செய்வோம். இன்ஷா அல்லாஹ் வரும் ஜூன் 3-வது வாரம் வரை பொறுமையாக காத்திருப்போம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...காயலானுக்கு தாசில்தார் அலுவலகத்தில் விருது வழங்கும் விழா !
posted by habib.k.v.a.t. (qatar) [21 February 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 33280

மன்னிக்கணும் …யாரையாவது என் எழுத்து மன வருத்தத்தை ஏற்படுத்தினால்….!!!

.உறுதி மொழி அளிக்கப்பட்டதாக தமிழில் மொழி பெயர்த்த அந்த குறிப்பிட்ட வாசகம் ஆங்கிலத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள லெட்டரில் எந்த வரியிலாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் யாராவது எனக்கு சொல்லுங்களே. எனக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியாது . அதனால் தான் உங்கள் உதவியை (மொழிபெயர்க்க ) நாடுகிறேன்.

இன்னும் நம்மை முட்டாள் என்று அதிகார வர்க்கம் எண்ணிக்கொண்டு தானே இருக்கிறது. 2014 -2015 க்கான பட்ஜெட் (ரயில்வே ) இன்னும் வரலையோ?! அங்கே சென்றவர்கள் எல்லோரும் அனுபவத்தால் முதிர்ந்தவர்கள். காரணம் இல்லாமல் அமைதி காக்க மாட்டார்கள். இருந்த போதிலும் ஆங்கிலமே தெரியாது ன்னு நினைத்து முட்டாள் ஆக்கிய அந்த தாசில்தாரின் மொழி யாக்கம் நம்மை வியப்பில் தான் ஆழ்த்து கிறது. அந்த லெட்டரில் , மொழியாக்கத்துக்கு நிகரான ஆங்கில வாசகம் எந்த வரியில் எழுதி இருக்கிறார் மதுரை கோட்ட மேலாளர்???

இனி ஒரு தேர்தல் நடந்து ?! ( நாம் ஒரு வேலை தேர்தல் புறக்கணிப்பு நடத்த விடாமல் ) நம் தலையில் முளகாய் அரைத்து ….அதன் பின்பு ரெயில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ( அது எப்போங்க இனி நடக்கும்? ) அதன் பின்பு டெண்டர் விட்டு??!! ….ஏங்க தாசில்தார் சார் …உங்கள தான் கேக்றேன் ….உங்க முன்னால இருக்கிறவர்களெல்லாம் படித்த அறிவாளிகள் தான்…முட்டாள்கள் அல்லர் . ரயில்வே மேலாளர் எந்த வாக்குறுதியும் கொடுக்க வில்ல…..தலை ஆட்டி விட்டு வந்திருக்கும் பெரியோர்களே…நீங்க சொன்னா சரிதான் .இதுக்கு மேல நாங்க என்ன சொல்ல?!

ஆண்டவன் விதிச்சது தானே நடக்கும். நடக்கட்டும் நாடகம் ! மொத்தத்தில் காயலான் புன்னகை மன்னன்.(இளிச்ச வாயான் ) என்பது நிதர்சன உண்மை ! யாரவது மறுத்தால் இங்கே எனக்கு பதில் சொல்லுங்கள்.

முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைமைக்கு யாருங்க ஆங்கில மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பு வாசகத்த வாசித்து காட்டினீங்க ? அவர்கள் எப்படிங்க ஒரு உறுதிமொழியும் கொடுக்காத மழுப்பல் லெட்டெர்க்கு சம்மதம் சொன்னாங்க ??? ஏன் இந்த குழப்பம் ??? யாரை திருப்தி படுத்த இந்த விளையாட்டு???

வேதனையுடன் ,
கே.வீ.ஏ .டி . ஹபீப்
கத்தார்

DEAR ADMIN.... என் முந்தைய பதிவை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்...இந்த பதிவை பிரசுரிக்கவும்.நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒருங்கிணைத்த ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றிச்செய்தி!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [21 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33281

அல்ஹம்திலில்லாஹ்! நமதூர் மக்களின் ஒட்டு மொத்த ஒருமித்த ,ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றிச்செய்தி..

வல்லஅல்லாஹ் நம்முடைய ஒட்டுமொத்த ஒற்றுமையை தொடர்வண்டி விஷியத்தில் தொடர்பாக்கி சோதித்து இருக்கிறான் என்றே எண்ணுகிறேன்! அவன் நாட்டப்படியே நாம் அனைவர்கள் உணர்வும் ஒட்டுமொத்த ஒற்றுமையில் ஒருங்கிணைந்ததால் அந்த ஓரிறைவன் நமக்கு வெற்றியின் வெளிச்சத்தை உதையமாக்க ஆரம்பித்துள்ளான்!

இதுவரை கிடைத்த வெற்றிக்கி வித்தூன்றிய மேன்மைமிகு முன்னணியர்கள் முதல் அன்புடனும் ஆர்வமுடனும் அணிசேர்ந்து போராட்டகளத்தில் குதிக்க காத்திருந்த கடைசி காயல் கண்மணிகள்வரையுள்ள உங்கள் அனைவர்களுக்கும் என்னுடைய மற்றும் நான் வசிக்கும் சவூதி "யான்போ"வாழ் காயல் சகோதரர்கள் அனைவர்களின் சார்பாக அன்பொழுகும் நன்றியினை உங்கள் நளிர் கரங்களில் காணிக்கியாக்குகிறோம்!

இதே ஒற்றுமையும்,உணர்வும் ஒருமித்த கூடலும் வருங்க்காலத்தில் நமதூருக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ,அப்போதெல்லாம் அணிதிரள தயாராக இருக்கிறோம் என்பதற்குறிய கடந்தகால பலசான்றுகளில் இந்த வெற்றியும் ஒரு சான்றாகும்!

இதே ஒற்றுமையுணர்வோடு உண்ணிப்பாக கவனிக்கவேண்டிய அடுத்து மிக முக்கியமானது,,நச்சு ஆலையின் நடவடிக்கையையும் அங்கிருந்து வெளியாகும் கழிவுகளின் தீங்கை அறிந்து அதை அடியோடு களைந்தெறியும் முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!

அந்த ஆலையிலிருந்து வெளியாகும் கழிவுகளில் நச்சுத்தன்மை இருக்கிறது என்ற நம்முடைய பலமான ஆதாரத்திற்கு அந்த ஆலையிலிருந்து இதுவரை ஆணித்தரமான பதில்இல்லை, மாறாக அக்கொடிய கழிவுக்கிருமியினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் பட்டியல்தான் நீண்டுகொண்டே போகிறது.இந்த செய்தியை எழுதும் இந்தவேளயிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சகோதரி மரணித்துள்ளார்.(இன்னலில்லாஹி.....)

ஆகவே அன்பு நெஞ்சங்களே இந்த ஆலை விஷியத்தில், அதற்காக ஏற்படுத்தி இருக்கும் "KEPA"அமைப்புக்கு நாம் ஒற்றுமையுடனும் ,ஒருசேரத்துடிக்கும் அதே உணர்வுடனும் அனைத்து ஒத்துழைப்பையும் அவர்களுக்கு அளிக்க வேண்டுமாய் உங்கள் அன்பு சகோதரர்களில் ஒருவனான ஆதம்சுல்தான் அகம் உருக வேண்டிக்கொள்கிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஒரு முறை தேர்தலை புறக்களித்து தான் பார்ப்போமே..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 February 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33282

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக கடிதம் தந்து இசைவு தெரிவித்துள்ளதை இப்போதைக்கு நாம் ஆறுதலாக எடுத்துக்கொள்ளலாம்..!

இது விசியத்தில் எத்தனையோ ஆண்டுகள் நாம் அக்கறையில்லாமல் ஆர்வமில்லாமல் கடந்த காலத்தை வீண் செய்து விட்டோம் என்பதே உண்மை - சரி பொறுத்து இருந்து ஜூன் 2014 மூன்றாம் வாரத்தில் பணி நடைபெறுகிறதா பார்போம்.. இன்ஷா அல்லாஹ்..

எனக்கு என்னமோ இதில் நம்பிக்கை இல்லை..! வருகிற தேர்தலில் இந்த பிரச்சனையால் இந்த ஊர் மக்களின் ஓட்டுக்கள் அனைத்தும் (தேர்தல் புறக்களிப்புக்கு) புறக்களிக்க காரணமாகி விடுமோ என்ற ஐயத்தில் வெளிப்பாடு தான் இந்த எழுத்துப்பூர்வமாக கடிதம் என நினைக்கிறேன்..!

தேர்தல் முடிந்த பின் அது சார்ந்த துறையிடும் முறையிட்டால் உங்களுக்கு கடிதம் தந்தவரிடம் சென்று முறையிடலாமே என்று கூட நமக்கு பதில் வரலாம்..! அப்போது கடிதம் தந்த நபர் வேறு மாநிலத்தில் மாற்றபட்டு இருப்பார்..!

அப்போது உள்ளவர்கள் இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு வருவதை அப்போது பார்த்து கொள்ளலாம் என இருப்பார்கள்..!

மொத்தத்தில் நாம் எதையும் பல தோல்விகள் - ஏமாற்றங்கள் - பிரச்சனைகள் - நம்பிக்கை துரோகங்கள் இவைகளுக்கு மத்தியில் தான் எதாவது ஒரு நமக்குள்ள உரிமை கிடக்கிறது.. அதில் ஓன்று இந்த (ரயில் ஏற நடைமேடை) உரிமை.

வருவார்கள் ஓட்டு கேட்பார்கள்... வெற்றி பெறுவார்கள் கோரிக்கை வைத்த ஊரையும் மறப்பார்கள்..! பிறகு அடுத்த 5 ஆண்டுக்கு பின் திரும்பவும் தேர்தல் வரும் ஓட்டு போட தயாராக நாம் இருப்போம்..

ஒரு முறையாவது நமது எதிர்ப்பை (DCW பிரச்சனை) - இன்னும் என்ன என்ன உரிமை நமக்கில்லை என்பதை ஆராய்ந்து அதை பதிவு செய்யும் விதமாக ஊரில் ஒட்டுமொத்த ஜமாஅத் சேர்ந்து அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு ஒரு முறை தேர்தலை புறக்களித்து தான் பார்ப்போமே..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Ahamed Sulaiman (Dubai) [22 February 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33283

Assalamu allaikum,

Ok this is a temparavery one because our people have getting new experiance through this opperation again this is make our kayal people in to under one umberla which. is a very great. Positive. Out put .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [22 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33286

அஸ்ஸலாமு அழைக்கும் ,

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அணைத்து அமைப்புகள் , கட்சிகள் , ஜமாத்துகள் , நல மன்றங்கள் , காயல் புறநகர் மக்கள் அமைப்புகள் மற்றும் ஊடக துறைகள் அனைவர்க்கும் ஒற்றுமையாக இணைந்து செயல்படதட்கு நன்றி தொடரட்டும் இந்த ஒற்றுமை வரும் காலங்களிலும் .

கொடுக்கப்பட்டுள்ள விளக்க கடிதம் என்பது ஒரு துறைசார் பதில்தான் மக்கள் அல்லது மற்ற துறைகள் திட்டங்களின் நிலைகளை ,மற்றும் அதன் தாமதம் குறிப்பிட்ட அறிய துறைகளிடம் இது போன்ற விளக்கங்களை எழுது மூலம் வாங்குவது நடைமுறை .

கண்டிப்பாக இதை கொண்டு அடுத்த கட்டத்துக்கு நம் நிலையை நகர்த்த முடியும் ஆனால் மீண்டும் நாம் உஷாராக இருந்து செயல்பட வேண்டும் போராட்டம் என்பது போராட்டம்தான் கிடைக்கும்வரை போராடுவது என்று அர்த்தம் .

நம் மக்கள் துறைசார்ந்த போராட்டங்களை தட்போதுதான் முறைப்படி துவங்கியுள்ளதால் போக போக அதில் உள்ள நடைமுறைகளை நல்ல நுணுக்கமாக அறிந்து செயல்பட இந்த போராட்டமும் அதில் கண்ட நடை முறைகளும் வரும் கால போராட்டங்களுக்கு கண்டிப்பாக உதவும் .

நம் மக்கள் தங்களின் கருத்துகளை ஆக்கப்பூர்வமாக பதிய வேண்டும் குறைகளை சுட்டி காட்டுவதுடன் அதனை நிவர்த்தி செய்வதற்கும் தங்கள் யோசனைகளை கூற வேண்டும் மம்முடைய விமர்சனங்கள் எந்த ஒரு காரியத்தையும் அடுத்த நல்ல நிலைக்கு ( கட்டத்துக்கு ) எடுத்து கொண்டுபோக முடியும்.

நம் சமுதாயம் அலுவல் நடைமுறைகள் , போராட்டம் , சலுகைகளை வாங்குதல் , அரசின் திட்டங்கள் பற்றிய அறிவு போன்றவற்றில் குறைந்தது 40 வருடங்கள் பின்தங்கி இருகிறோம் .

என்ன சலுகைகள் நமக்கு இருக்கிறது என்பது கூட நம் மக்கள் அறிவதில்லை . முஸ்லிம்லீக் இது போன்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்த வேண்டும் மக்கள் தானாக தங்களிடம் வருவார்கள் .

இந்த காயல் இரயில் வேலை ஜனாப் ஈ அகமது இத் துறை இணை அமைசராக இருந்த போது முடிந்து இருக்க வேண்டும் சரி நம் மக்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவம்தான் இனியாவது விழித்துக் கொண்டால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [22 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33287

அஸ்ஸலாமு அழைக்கும் ,

நம் இந்திய ஜனநாயக திரு நாட்டில் நமக்கு கிடைதத்துல்ல ஒற்றை ஆயுதம் இந்த ஓட்டு போத்தான் தான் இதை நாம் பயன் படுத்தா விட்டால் மற்றவருக்கு ஒன்றும் நஷ்டம் இருக்காது நமக்குதான் அது பெறும் நஷ்டமாக அமையும் .

சகோதரர் இஸ்லாமிய தமிழன் முத்து இஸ்மாயில் அவர்களின் ஆதங்கம் நமக்கு புரிகிறது இதன் மூலம் எந்த அளவுக்கு நம் மக்களின் பொறுமையைகளை இந்த ஆட்சியாளர்களும் , நிர்வாகங்களும் சோதித்திருப்பார்கள் என்பதை நாம் உணரமுடிகிறது .

நம்மிடம் இந்த ஜனநாயக ஆயுதம் மட்டும் இல்லை என்றால் ஒரு பயலும் நம்மை கவனிக்க மாட்டான் என்பது நம் அனைவர்க்கும் கண்டிப்பாக தெரியும் .

நம் மக்கள் கைகளில் எடுக்க ஜனநாயக ஆயுதங்கள் நிறைய இருக்கிறது அவைகளை நாம் முறையாக பயன் படுத்த வேண்டும் இது போன்ற போராட்டங்கள் , சாலை மறியல் , இன்னு ஜனநாயக முறையான வழி முறைகள் நிறைய உள்ளது .

எனவே ஓட்டு என்பது போட்டால்தான் நமக்கும் நல்லது , நம் ஜனநாயகத்துக்கும் நல்லது போடாத நம்முடைய ஓட்டுகள் நமக்கு நம் ஜனநாயகத்துக்கும் நாம் வைக்கும் வேட்டு சிந்திக்கணும் செயல்படனும் .

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [22 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33291

தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஏற்கெனவே இரயில்வே அமைச்சரால் வாக்குறுதியளித்து வேளைகள் ஆரம்பமாகி இடைநிறுத்தம் செய்யப்பட பணிகளை நிறைவேற்றி தர தானே வேண்டுகிறோம். புதிய கோரிக்கை அல்லவே! இதற்கு வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி தருவதாக ஒப்புக்கொண்டிருப்பது ....... எப்படியோ நம் கோரிக்கை வெற்றி யடைந்து வேளைகள் முடிந்தால் சந்தோஷமே!

நடைமேடையை உயர்த்துவது என்ன ஆனது? இந்த கோரிக்கையையும் இத்தோடு நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்து நெருக்க வேண்டியது தானே!

இதனாலேயே பல பயணிகள், முதியவர்கள் இயலாமையால் திருசெந்தூர் சென்று ஏறுவதும் திருசெந்தூர் வந்து இறங்கவும் செய்கிறார்கள்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [22 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33295

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த தகவல் ....நமது ஊர் அனைத்து மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ...என்றே தான் குறிப்பிடலாம் .....அல்லாஹ் நாம் நம் ஊர் மக்களுக்காக இந்த ரெயில்வே துறை இடம் போராடி வரும் பொதுநலத்துக்கான அனைத்து காரியங்களிலும் முழுமையான வெற்றியை தந்தருள்வானாகவும் ஆமீன்............

இதற்க்கான முழுமையான செயலில் ஈடுபட்ட நமது ... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் & மற்ற நமது சகோதர ..கட்சி'களையும் + நமது ஊர் முக்கிய ' ஸ்தர்களையும் ; பாராட்டியே ஆகணும் .....

ஆமா இந்த அழைப்பு கூட்டத்தில் நமது தமிழகத்தின் முக்கியமான ஒரு கட்சியான ...A.D.M.K....நம் ஊர் தலைகளை ( பெயரை ) காணோமே ?? இங்கும் பிரிவினையா .....என்ன ....

நாம் நமது தொகுதி MP அவர்களை தொடர்ப்பு கொள்ளலாமே ..??

இந்த கோரிக்கை மீது தற்போது ஆளுகின்ற ...காங்கிரசு கட்சி நல்ல முறையில் செய்து தந்தாள் நல்லது ...இல்லை எனில் ...நாம் காங்கிரசு கட்சியை நாம் வரக்கூடிய MP.. தேர்தலில் ( நம் ஊர் மக்கள் ) சரியான ஒரு பாடம் புகுட்ட வேணும் .......

நமது ஊர் பொது மக்களின் ரொம்பவும் அத்தியாவசியமான ஊர் நலனுக்காக வேன்றி ...... நாம் இந்த விசையத்தில் ஒற்றுமையை கடை பிடித்து ....தொய்வின்றி ....செயலாற்றி வெற்றியை காண்போமாக .....

நமது ஊர் வயதான ஆண் / பெண்மணிகள் / ஊணமுற்ற நமது சகோதரர்களையும் நாம் எண்ணி பார்க்க வேணும் .....முக்கியமாகவே நாம் திருச்சந்தூர் போய் ரயில் ஏறுவதை நாம் தவிர்க்க வேணும் ....

நாம் ஓன்று படுவோம் ....முழு வெற்றியை ...அடைவோம் .....

வல்ல இறைவன் நமக்கு துணை நிற்பானாக ....... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...BETTER LATE THAN NEVER
posted by mackie noohuthambi (chennai) [22 February 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33299

முந்திய பேச்சுவார்த்தையில் அரசிடம் நிதி இல்லை, நீங்கள் ஊர் மக்களிடம் வசூல் செய்து வேண்டிய வசதிகளை செய்து கொள்ளுங்கள் என்ற ஒரு ஆணவ பேச்சில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.

ரயில்வே அதிகாரி அவர்களின் கடிதத்தின் இறுதி வரிகள் ஒரு உறுதிமொழியை தந்தாலும் அது ஒரு பலவீனமான ஒன்று. ஆனாலும் இதற்கு மாற்றமாக நாம் ரயில் மறியல் போராட்டம் நடத்தியே தீருவோம் என்று நாம் அடம் பிடித்தால் சில தகாத விளைவுகளை சம்பந்தப்பட்ட ரயில்வே துறையே செய்து விட்டு நம் மீது பழிபோட்டு, வரவிருக்கும் நல திட்டத்தையும் முடக்கி விடுவார்கள். நாட்டில் என்ன உமர் அவர்கள் ஆட்சியா நடக்கிறது.

இந்த வகையில் முஸ்லிம் லீகின் தலைமை நல்ல முடிவையே எடுத்திருக்கிறது.நான் முன்பு ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தேன். "உரசியவுடன் பற்றிக் கொள்ளும் தீக்குச்சியைபோல் இருக்க வேண்டுமே தவிர எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் தீப் பந்தம்போல் இருக்கக் கூடாது".

சில இஸ்லாமிய இயக்கங்கள் அப்படி நடந்து கொண்ட காரணத்தால் இன்றும் கோவை சிறையில் முஸ்லிம்கள் தங்கள் இளமையை தொலைத்துக் கொண்டு முதுமையை முத்தமிட்டுக் கொண்டிருக்கின்ற சோகத்தை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் முஸ்லிம் லீக்கின் அணுகுமுறை போற்றுவதற்கு உரியது.. நமதூர் மக்களும் அந்த முடிவை மதித்து நடப்பதே நமக்கு கண்ணியத்தை தரும்.

ஆனால் அடுத்த ஆட்சி கலைஞர் கைகாட்டுபவர் பிரதமராக வந்தாலும் புரட்சி தலைவியே பிரதமராக வந்தாலும் அல்லது நாம் விரும்பாத ஒரு தேநீர் வியாபாரியே பிரதமராக வந்தாலும் இந்த உத்தரவாதமெல்லாம் செல்லாக் காசாகி விடும். இன்று நாட்டில் மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கும் கோமாளி தனமான ஆட்சிகள் நாடாளுமன்ற சட்டமன்ற நடவடிக்கைகளை நாம அன்றாடம் பார்த்து வருகிறோம். உச்சமன்ற தீர்ப்புகளே சர்சைக்கிடமாகி இருக்கிறது...எனவே உறுதி மொழியாவது , அது நிறைவேறுவதாவது , நமக்கு வேறு வழி இல்லை.பொறுத்திருந்து பார்ப்போம். நாம் முழுக்க முழுக்க அல்லாஹ்வை நம்பியிருப்பவர்கள். நமக்கு நல்லவை செய்யும் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்று அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [23 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33302

அஸ்ஸலாமு அழைக்கும் ,

நம் முஸ்லிம்லீக் ஆரம்பத்தில் சற்று உஷாராக இருந்து இருந்திருன்தால் இந்த தாமதம் ஆகாமல் இருந்திருக்க நமக்கு நடை மேடையும் கிடைத்து இருக்கும் இவர்கள் மக்கள் மற்றும் சமுதாய பணிகளில் இறங்காமல் ஒதுங்கியதின் காரணமாகதான் மற்ற சிறு கரு முஸ்லிம் அமைப்புகளும் , கட்சிகளும் தோன்ற காரணமாக அமைந்தது என்றால் அதில் மாற்று கருத்து இருக்கமுடியாது .

ஈ அஹமது இந்த துறை இணை அமைகாராக இருந்த போது நாம் ஐயர்ந்து விட்டோம் அது போல கோவை கைதிகள் விசயத்தில் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லாமல் தனிதனியாக செயல்பட்டது ஒரு காரணம் ஆனால் கடைசி கட்டத்தில் முஸ்லிம்லீக்குடைய செயல்பாடுகள் நல்ல முறையாக முயற்சியாக இருந்தது என்பது உண்மை .

இன்னும் பல அப்பாவி முஸ்லிம் மக்கள் கைதிகளாக இருகிறார்கள் அதில் பல சகோதரர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் இல்லை அல்லது காரணம் இல்லாமல் சிறை கைதிகளாக உள்ளனர் .

ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் கொலை குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை உட்சநீதி நீதிமன்றம் , மாநில அரசு மற்றும் நம் இன்னும் மற்ற தமிழக கட்சிகள் அனைத்தும் விடுதலை செய்ய வரிந்து கட்டி கொண்டு செயல்படுவதை பாரிக்க முடிகிறது . ஆனால் அது சமையம் நாம் , நம் அமைப்புகள் , மாநில கட்சிகள் , குறிப்பாக இஸ்லாமிய கட்சிகள் இந்த மாநிலத்தில் இந்த சூழ்நிலையை பயன் படுத்தி போராட்டம் அடையாள உண்ணா நோன்பு அல்லது கோரிக்கைகளை அரசுக்கும் , நீதி துறைகளுக்கும் வைக்க முன்வந்த செய்திகள் ஒன்றாவது உள்ளதா இருந்தால் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும் அதையாவது கண்டு ஆறுதல் அடைவோம் .

நம் அரசியல் கட்சிகள் இந்த சந்தர்பத்தை பயன் படுத்த வேண்டும். ஒரு அரசியல் கட்சியும் நமக்கு குரல் கொடுக்க மாட்டார்கள் நாம் தான் நமக்கு குரல் கொடுக்க வேண்டும் நம்முடைய ஓட்டுகள் மட்டும் தான் அவர்களுக்கு வேண்டும் .

நமக்கும் இந்த ஓட்டுகள் சற்று பக்க பலம் இந்த உரிமை மட்டும் நமக்கு இல்லை என்றால் ஓர் நாயும் நம்மை திரும்பி கூட பார்க்காது . கொடுக்கப்பட்டுள்ள இந்த உரிமையையாவது நாம் நமக்கு சாதகமாக பயன் படுத்தனும் .

நம் மக்கள் வலைதளங்களில் மற்றும் அவர்களின் தரம் தாழ்த்து விமர்சனைங்களை ஊடகத்தில் பதிகிறார்கள் அது நம்முடைய கணியத்தையும் குறைக்கும் மாறாக நம்மீது துவேஷத்தை வளர்ப்பவர்களுக்கு சாதகமாக அமையும் .

நடுநிலை மாற்று மத நண்பர்களும் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் இழந்து விட வாய்பாக அமையும் ,நம்மை ஒற்றுமைபடுத்த தேவையான கருத்துகளை அதிகம் பதிய வேண்டும் சமதுவமான கருத்து என்றும் நம்முடையதாக இருக்கணும் . அதுதான் உண்மையும் நம்மையும் நாட்டுக்கும் நம் அனைவர்க்கும் நன்றி தொடருங்கள் நல்ல பணிகளை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [23 February 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 33304

"புதிதாக ஒப்பந்தம் விடப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2014-15 நிதியாண்டில், ரயில்வே நிதிநிலையறிக்கை மூலம் கூடுதல் தொகை பெற்று, அதனடிப்படையில் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன்".

ஒரு அரசு அதிகாரியாக என்ன செய்ய முடியுமோ அதனை அழகாக செய்து முடித்து இருக்கிறார்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [24 February 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33310

எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே.

* ஊரின் நலனுக்காக தங்களை அற்பணிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

* ஊரின் நலன் என்றதும் அனைத்து கட்சிகளும் ஒன்று இணைந்து இருப்பது மிக்க மகிழ்வு.

* இந்த நிகழ்வுகளை முன்னின்று நடத்தி வரும் தாய் சபைக்கு நன்றிகள் பல.

** எப்படியோ ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக இசைவு தந்ததை ஒரு வெற்றி என்றே சொல்லலாம். நம்பிக்கையுடன் காத்து இருப்போம். நம்பிக்கையில் தானே வாழ்க்கையே ஓடுகின்றது. ரயிவே ஓடாதா?

** ரயில்வே அதிகாரி, அரசிடம் நிதி இல்லை, ஊர் மக்களிடம் நன்கொடை வசூலித்து மீதம் உள்ள பணிகளை முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

காரணம், ரோட்டு ஓரம் உள்ள குடிநீர் தொட்டி இடிந்த நிலையில் நகராட்சியால் கண்டு கொள்ளாமல் இருக்கின்றதா, குடிநீர் வால்வு தொட்டியில் மூடி இல்லாமல் குப்பை கிடங்காக மாறுகிறதா - உடனே முன்னாள்/இந்நாள் நகரமன்ற உறுப்பினர் தன் சொந்த செலவில் அதை முடித்து விடுகிறார்,

- வாகன விபத்தை தடுக்க குவிக்கண்ணாடிகள் தேவையா. அரசாங்கம் செய்ய வேண்டியதை நம் சகோதரர்களே செய்து விடுகின்றார்கள்.

- குப்பை கொட்ட நகராட்சிக்கு புறம்போக்கு நிலம் இருந்தும் இல்லாமல் இருக்கின்றதா, உடனே தன் சொந்த நிலத்தை கொடுக்கின்றார்கள்.

- துணை மின் நிலையம் அமைய, அரசாங்கத்தில் நிலமே இல்லாமல் அவதிப்படுவதால்..!!, நம் மக்கள் முன் வந்து பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை வாங்கி கொடுத்தார்கள்.

- அந்த திட்டம் இந்த திட்டம் என்று எது வந்தாலும் காயல் மக்கள் அள்ளிக்கொடுக்கின்றார்கள்.

- அரசாங்கம் செய்யவேண்டிய விழிப்புணர்வு முகாம்கள், மருத்துவ முகாம்களை தொடராக அருமையாக செய்து வருகிறார்கள்.

இது மாதிரியான பல அள்ளிக்கொடுக்கும் வள்ளல் செயலை, ரயில்வே அதிகாரி இழிச்ச்சவாக செயலாக கருதினால் அது அவரின் அறியாமை.

சரி. நாம், நம் செலவில் மீதம் உள்ள வேலைகளை செய்து விடுவோம், அவர்கள் ஒரு வருடம் காயல்பட்டினத்தில் பதிவு செய்யும் டிக்கட்டுகளை இலவசமாக தருவாரா.?

ஒரு சிறு பிளாஷ் பேக், நம் ரயில்வே நிலையம் இருட்டு அடைந்து கிடப்பதால், ஜனாப் ராவன்னா அபுல் ஹசன் ஹாஜி அவர்கள், தன் சொந்த செலவில் மின் விளக்குகள் போன்ற கருவிகளை அன்பளிப்பாக வழங்கினார்கள் (அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்).

ஆனால் அதை, தனியாரிடம் இருந்து நன்கொடை வாங்க மாட்டோம் என்று கிடப்பில் போட்டதாக ஒரு நினைவு. இந்த நிகழ்வு சரி என்றால், பிளாட்பாரம் கட்ட மட்டும் நன்கொடை வாங்க சட்டம் அனுமதி கொடுக்கின்றா..? புரிய வில்லை.

சரிங்க, முன்பு இந்த போராட்டங்களில் வீரியமுடன் பங்கு பெற்ற த.மு.மு.க, இதில் கலந்து கொள்ளவில்லையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. ஆதங்கத்தை அவிழ்க்கிறேன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [24 February 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33321

வட்டாச்சியர் வார்த்தை ஜாலத்தை கைகொண்டு சொற்களில் சித்து விளையாட்டை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது! ஆங்கில மொழிபெயர்ப்பு அறிக்கையை அமைத்ததில் கெட்டிக்காரத்தனத்தை கையாண்டதாக வட்டாச்சியர் நினைத்தால் அது அவரையே அவர் ஏமற்றிக்கொண்டதாகத்தான் அர்த்தம்!

நேற்றய ஒப்பந்தத்தில் ஒட்டு மொத்த மக்களுக்கு உடன்பாடில்லை. அந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டு போராட்டத்தில் குதிக்கிறோம், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, அதாவது வேலைகள் ஆரம்பிக்கும் முதல் நாள்வரை எங்கள் போராட்டம் நீடிக்கும் என்று நாம் மாற்றிப்பிடித்தால், இந்த வட்டாச்சியர் என்ன, ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகமே நம்முன் மண்டியிட வேண்டியதுவரும்!

ஆனால் நம் போராட்ட ஏற்பாட்டு குழுவிலுள்ளவர்கள் கண்ணியமானவர்கள், காயல் நகரின் நாகரீக கட்டுப்பாட்டை உணர்தவர்கள் என்ற முறையில் இந்த ஒப்பந்தத்தோடு வந்திருக்கிறார்கள் பொருந்திருந்துதான் பார்ப்போமே!

இந்த நேரத்தில் என் மனதில் தேங்கி கிடந்த ஒரு ஆதங்கத்தை தெரிவிக்க விரும்புகிறன். இதை ஏன் நான் முன்னமே சொல்லாமல் விட்டதற்க்குறிய காரணம், நமதூர் அனைத்து சகோதரர்களும் ஒட்டுமொத்தமாக,ஒற்றுமையாக,ஒருமித்த உறுதியான எண்ணத்துடன் இப் போராட்டத்தில் குதிக்க தயாராகி உணர்ச்சிப்பொங்க வரும் ஞாயிருக்காக காத்திருக்கும் இச்சமயத்தில் என்னுடைய கருத்துப்பதிவால் இமியளவும் ஒற்றுமைக்கு ஊறு ஏற்பட்டு விடக்கூடாதே என்ற ஒரு பாதுகாப்பு பதுங்கள்தான் முக்கிய காரணம்!

என் எண்ணத்தை இப்பொழுது அவிழ்க்கிறேன்! நம்முடைய மரியாதைக்குறிய ரயில்வே இணை அமைச்சர் E.அகமது அவர்கள் எததனை தடவை நமதூருக்குவந்தார்கள். கட்சி நிகழ்ச்சிக்கும்,கல்யாண நிகழ்ச்சிக்கும் கலந்து கொண்ட அவர்கள் சிறிது கண் அசைத்தாலே போதுமே நம் ரயில் நிலையத்தின் அவலம் அன்றைக்கே சரியாகி இருக்குமே! மதிய ரயில்வே இணையமைச்சர் மான்புகிக்கு E அகமது அவர்கள் அத்தனை அதிகாரம் பெற்றவருமான நம்மின அமைச்சரல்லவா. திருவனந்தபுரத்தை சற்றுபாருங்கள் அங்கு நம் இந்திய நாட்டின் எந்த ஊரிலும் இல்லாத அளவிற்கு அனைத்து வசதிகளும் அடங்கிய அனைத்து தொடர்வண்டிகளும் சங்கமமாகி எந்த தடங்கலும் இன்றி இயங்கி வருகிறது!

அருகிலுள்ள மாநிலத்தின் ஒர் ஊரில்,அதுவும் நம்மின மக்கள் மிகுதியாக வாழும் ஊரில்,அதுவும் தான் சார்ந்திருக்கும் கட்சியினர்கள் தம்மை உற்சாகமாக வரவேற்ற ஊரிலுள்ள ஒரு சில குறைகளை களைந்தெறிய முடியாதா இந்த இணையமைச்சருக்கு?

தி மு க,/அ தி மு க /காங்கிரஸ் என்ற எந்த MP முயற்சித்தாலும் இறுதில் முறையீடு மனு முட்டி மோதி நிற்க்குமிடம் ரயில்வே அமைச்சகத்திடம் தான்,அவர்கள் அசைந்தால்தான் ஆண் பிள்ளையோ ,பெண்பிள்ளையோ பெற்றிட முடியும்!

செந்தூர் புகைவண்டியை தினந்தோறும் விடவேண்டும், புகைவண்டி நிலைய பராமரிப்பு பணிகள் செய்யப்படவேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன் வைத்து முன்னர் தா.மு மு.க அமைப்பினர்கள் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ருந்தார்கள்,அச் சமயம் இ.யூ.மு.லீக் ஒரு பிரசுரத்தை ஜிம்மா அன்று வெளியிட்டது.அதில்,நாங்கள் ரயிவே இணையமைச்சர் E அகமது அவர்களிடம் ரயில்வே சம்பந்தமாக அனைத்து கோரிக்கைகளையும் வைத்து விட்டோம்,அவரும் அனைத்து குறைகளையும் நிறைவேற்றுவதாக மக்கள் முன் உறுதி தந்துள்ளார்.ஆகவே ரயில் மறிப்பு போராட்டம் அவசியமற்றது என்று கூறி இருந்தார்கள்!

அன்றுபோராட்டம்நிறைவேறியது.ஆனால்வாக்குறுதிகள்??????

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved