கத்தர் காயல் நல மன்ற ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், மலேஷிய காயல் நல மன்றம் (க்வாமலாய்), ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோசியேஷன் அமைப்புகள் இணைந்து, இம்மாதம் 22ஆம் நாளன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் - KAYAL WALKATHON 2014 நிகழ்ச்சி, 23ஆம் நாளன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் ஆகியவற்றை நடத்தவுள்ளன.
நடைப்பயணம் துவங்குமிடம், முடியுமிடத்தில் சிறப்பேற்பாடுகள், ஆங்காங்கே வரவேற்பு வளைவுகள், டிஜிட்டல் பதாகைகள் என ஆயத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நகர பள்ளி மாணவ-மாணவியருக்கான - நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் பரிசுக்குரியோரைத் தேர்ந்தெடுக்கவும், நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கவும், இம்மாதம் 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (நேற்று) 20.00 மணிக்கு, இக்ராஃ கல்விச் சங்க அலுவலக வளாகத்தில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமை தாங்க, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் – நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் முஹ்யித்தீன், இணைந்து நடத்தும் - காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைத்தலைவர் எம்.எஸ்.சதக்கு மீரான், மலேஷிய காயல் நல மன்ற உறுப்பினர் காதர் சாமுனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், ஓவியப்போட்டியில் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டு, இறுதிகட்ட பணிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
22.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், முகாமை இணைந்து நடத்தும் அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம் |