காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில் - மாணவ-மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டலுக்காக இந்திய தொழில்நுட்பக் கழகம் - IITக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும் ஈடிணையில்லா கிருபையும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன்.
அன்பிற்கினிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
நமது கே.சி.ஜி.சி. யிலிருந்து பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கான “உயர்கல்வி வழிகாட்டுதல்” நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் நடத்தி வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! அது போல் இவ்வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தமுறை சற்று வித்தியாசமாக பள்ளிக்கூட மாணவ, மாணவியரை சென்னை கிண்டியில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியான இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு (I.I.T) இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 23-பிப்ரவரி-2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அழைத்துச் சென்றுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். தொழில் நுட்பம், கணிதம், மனிதம் மற்றும் மேலாண்மை படிப்புகளை சொல்லித்தரும் கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் I.I.T முதன்மை வகிக்கின்றது. இந்த கல்வி நிறுவனத்திற்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு.
மேலும், இந்த நிறுவனத்தில் படித்து முடித்து வெளியில் வருவதற்கு முன்பாகவே வருடத்திற்கு பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் வேலை வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன. இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள் பல துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
கல்வி பயிலும் மாணவர்கள் பலருக்கும் இது போன்ற கல்வி நிறுவனங்களில் பயில்வது ஒரு பெரிய கனவாகும். இப்படி பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பு நமதூரைச்சார்ந்த மாணவர்களுக்கு எட்டா கனியாகவும், போதிய வழிகாட்டல் இல்லாமல் இருப்பதையும் கவனத்தில் கொண்டு, காயல் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமை நடத்தி, அதில் I.I.T தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நமது KCGC இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
6ஆம் வகுப்பு முதலே இது போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு நடத்தப்படும் IIT – JEE போன்ற நுழைவுத்தேர்வுகளை எப்படி எழுதுவது மற்றும் அதில் எப்படி நல்ல மார்க் வாங்கி தேர்ச்சி பெறுவது போன்ற வழிகாட்டல்களை இன்ஷா அல்லாஹ் காயல் மாணவர்களுக்கு வழங்க உள்ளோம்.
அதனடிப்படையில், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கின்ற 30 மாணவர்களுடன் சென்னை ஐ.ஐ,டி (I.I.T) – க்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.100/- பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து ஏற்பாட்டுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.
இந்த பயனுள்ள முகாமில் கலந்துக்கொள்ள, வரும் 22-பிப்ரவரி-2014, மதியம் 12: 00 மணிக்குள் முன்பதிவு செய்து, பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மொத்தம் 30 இருக்கைகளுக்கு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நிரல்:
முகாம் தேதி: 23-பிப்ரவரி–2014. - ஞாயிற்றுக்கிழமை
கால நேரம்: காலை 09:00 முதல் மாலை 05:00 மணி வரை
இன்ஷாஅல்லாஹ் கல்விச் சாலையை நோக்கி சரியாக காலை 9 மணிக்கு சென்னை மண்ணடியிலிருந்து பயணம் புறப்படும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
நிர்வாக அலுவலர் : ஹைதர் உசேன் : +91-87544 09169
குறிப்பு:
எக்காரணத்தைக் கொண்டும் பேருந்து புறப்படும் நேரம் நீட்டிக்கப்படாது. (காலை 09:55 மணிக்கு முன்பாக IIT வளாகத்தை அடைய வேண்டும்).
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம் காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம் அனைவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன்.வஸ்ஸலாம்.
ஜசாக்கல்லாஹூ ஃகைரன்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹைதர் ஹுஸைன்
நிர்வாக அதிகாரி - KCGC |