காயல்பட்டினத்தில் நடப்பு பிப்ரவரி மாத துவக்கம் வரை நீடித்து வந்த குளிர்கால வானிலை மாறி, வெப்ப வானிலை நிலவி வந்தது. நேற்று (பிப்ரவரி 23) வரை வெயில் வீசிய நிலையில், இன்று அதிகாலை 06.00 மணிக்கு திடீரென நகரில் இதமழை பெய்தது.
காலை 09.30 மணி வரை இதமழையாகப் பெய்தது. அது முதல், தற்போது நண்பகல் 12.00 மணி வரை சிறுமழை பெய்தது.
இம்மழை காரணமாக, வழமை போல நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.
நண்பகல் 12.00 மணி நிலவரப்படி - அது வரை இருண்டிருந்த வானம் வெளுக்கத் துவங்கியுள்ளது. மழை நின்றது.
மழை நீர்த்தேக்கத்தில் சிறுவர்கள் சிலர் காகித ஓடங்களை மிதக்க விட்டிருந்தனர். நீர் வற்றியதும் அவை கவிழ்ந்தன.
இதற்கு முன், இம்மாதம் 20ஆம் நாள் வியாழக்கிழமை அதிகாலை 06.00 மணி முதல் 06.20 மணி வரை சிறுமழை பெய்தது.
இதற்கு முன், 2014 ஜனவரி 14, 15 நாட்களில் பெய்த மழை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |