சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர் M.Phil. பட்டம் பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-
சென்னை புதுக்கல்லூரி பட்டமளிப்பு விழா, இம்மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞருமான மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, “அஷ்ஷெய்க் முஹம்மத் இஸ்மாஈலுன் நஹ்வீ ஹயாத்துஹு வகித்மாத்துஹு அத்தீனிய்யா வல்லுகவிய்யா” (மஹான் நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் அவர்களின் வாழ்க்கைச் சரிதம், உலகுக்கும் - அரபு மொழிக்கும் அவர்கள் ஆற்றிய சேவை) எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தமைக்காக, M.Phil. பட்டம் வழங்கப்பட்டார்.
1. Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[24 February 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33323
அன்பு தம்பி அபூதாஹிர் ஆலிம் M.Phil பட்டம் பெற்றதை உளமார வாழ்த்துகிறேன். தொடர்ந்து P.hd பட்டம் பெறவும் வாழ்த்துகிறேன்.
ஆலிம்கள் கிணற்று தவளைகள் என்ற வாதத்தை தவிடு பொடியாக்கிய அன்பு இளவலின் சன்மார்க்க பணி நீடுழி காலம் நின்று நிலைத்து,வையகத்தில் வாழ்வாங்கு வாழ வல்லவனாம் அல்லாஹ்வை உள்ளார இறைஞ்சுகிறேன்.ஆமீன்
2. Re:...GRADUATION posted byJ.A.JALEEL (HONGKONG)[24 February 2014] IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 33325
OUR HEARTY FELICITATIONS & CONGRADULATIONS TO THE RENOWNED AALIM FOR HIS NOBLE DEED AND WISHING HIM TO GET MANY MORE AWARDS & REWARDS IN FUTURE FOR DAAVETHE ISLAM.
3. Re:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A)[24 February 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33327
மரியாதைக்குரிய ஆலிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்கள் மார்க்க பணி சிறந்து விளங்கவும் நம்மை விட்டு பிரிந்து சென்ற மார்க்க மேதைகள், உலமாக்களின் வெற்றிடத்தை தங்களைப்போன்ற ஆலிம்கள் மூலம் வல்ல நாயன் நிறப்புவதற்கும் வல்லோனை வேண்டுகிறேன்.
அஸ்ஸலாமுஅலைக்கும்.எங்கள் பாட்டனார் வாழ்க்கை நெறியை இவ்வயகதுக்கு உகப்புடன் அளித்த அன்பு மருமகன். எங்கள் குடும்பத்துக்கும், எங்கள் முஹல்லாவிற்கும், நமது ஊருக்கும், இன்னும் பழ பட்டங்கள் பெற்று நல்ல புகழை ஏற்படுத்தி தர வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
6. வாழையடி வாழையாக. posted bys.s.md meerasahib (TVM)[25 February 2014] IP: 223.*.*.* India | Comment Reference Number: 33334
அஸ்ஸலாமு அலைக்கும். மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ அவர்களுக்கு M.Phil. பட்டம் கிடைத்தமைக்கு பாராட்டுடன் வாழ்த்துகிறேன்.
ஆலிம் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ அவர்கள் நம் சுன்னத்துவல் ஜமாத்தின் கொள்கை பிடிப்பின் நுனுக்கம்களை நம் மூத்த மார்க்க அறிஞர்கள் வாயிலாக பலவற்றை அவரின் சுய முயற்ச்சியால் தெரிந்தும், அவற்றை ஆராய்ந்தும் அதை நம் மக்களுக்கு போதித்தும் வரும் ஒரு இக்காலத்துக்கு பொருத்தமான விளக்கவுரையாளர். இவர்களை போன்றே....... நம் இளைய ஆலிம்கள் நம் அகீதாவை வாழையடி வாழைபோல மக்களிடம் சென்றடைய செய்யணும்.
எங்கள் கண்ணியத்திற்குரிய ஆலிம் பெருந்தகை அவர்களுக்கு எனது இதயங் கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹித் த ஆலா வ பறக்காத்தஹு.
ஆழியே அனுதாபம் தெரிவித்து தனதுப் பேரலையின் சீற்ற்ற்றத்தை நிறுத்தி மஹானவர்களின் இத்தரை வாழ்வின் ஓய்வுக்கு மரியாதை செலுத்திய எனது மனைவி வழிப் பாட்டனார் மறைந்தும் மறையாமல் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் ஞானக் கடல் மாதிஹுப் புஹாரி மர்ஹூம் அல்லாமா அஸ்-ஷெய்கு மௌலானா மௌலவி அல்-ஹாஜ்,அழ்-ஹாபிழ் நஹ்வி S A முஹம்மது இஸ்மாயில் ஆலிம் முப்தி அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தையும்,அன்னார் இவ் உலகிற்க்காற்றிய சன்மார்க்க சேவையையும் குறிப்பாக அவர்கள் அரபு மொழிக்காற்றிய சேவையையும் ஆய்வு செய்து சமர்ப்பித்ததன்மூலம் M PHILL பட்டயம் பெற்று தனது வாழ்வில் மேலும் ஒரு படிகல்லை நிலை நிறுத்திய கண்ணியத்திற்குரிய அறிஞர் பெருந்தகை அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் துணையாலும்,நமது உயிருக்கும் மேலான கண்மணி நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நல்லாசியாலும் நாயகத் தோழர்களின் (ரலியல்லாஹு அன்ஹும் ) நற்க்கிருபையாலும்,உன்னத இமாம்கள்,கௌதுல் அஹ்லம் முஹியியதீன் அப்துல் காதர் ஜிலானி ரலியல்லாஹு அன்ஹு,மற்றும் உயரிய இறை நேசச் செல்வர்களின் ரலியல்லாஹு அன்ஹும் துஆ பரக்கத்தாலும் மேலும் அன்னவர் ஷெய்கு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் துஆ பரக்கத்தாலும் வாழ்வில் மேலும் பல பட்டங்களையும் பதவிகளையும் பெற்று சரீர சுகத்துடன் பல்லாண்டு வாழ்ந்து இவ் வையகத்திற்கு சன்மார்க்க சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக! ஆமீன் என்ற எனது துஆவுடன் வாழ்த்துகின்றேன்.கணம் ஆலிம் அவர்கள் இந்த அடியேனுக்காகவும்,எனது மனைவி,மகள், மற்றும் எங்கள் குடும்பத்தார் ஹக்கிலும் துஆ செய்ய வேண்டுகின்றேன்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
பாலப்பா AK முஹியியதீன் அப்துல் காதர்
mannady
சென்னை
8. Re:...அபூதாஹிர் ஆலிம் M.Phil posted byIsmail Sufi (Kayalpatnam)[25 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33340
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆலிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அன்புத் தம்பி செய்யது அபூதாஹிர் ஆலிம் அவர்கள் M.Phil பட்டம் பெற்ற செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி. நமதூருக்கு கிடைத்திருக்கும் இதுபோன்ற ஆலிம்களின் சேவை தொடர வேண்டும் என்பது நமது விருப்பம்.
குறிப்பாக அவரது தாய், தந்தை மிகப்பெரிய பாக்கியசாலிகள். இறைவன் அருளால் மேலும் பல பட்டங்கள் பெற்று நமதூருக்கும் அவர் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க இறைவனை வேண்டுகிறேன்.
10. Re:...வாழ்த்துக்கள் posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[25 February 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33360
சென்னை புதுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காயல் மார்க்க அறிஞர் , ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ அவர்கள் M.Phil. பட்டம் பெற்ற செய்தி அறிந்து மிகவும் சந்தோசம் .
மரியாதைக்குரிய ஆலிம் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அன்பு தம்பி அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞருமான மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, “அஷ்ஷெய்க் முஹம்மத் இஸ்மாஈலுன் நஹ்வீ ஹயாத்துஹு வகித்மாத்துஹு அத்தீனிய்யா வல்லுகவிய்யா” (மஹான் நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் அவர்களின் வாழ்க்கைச் சரிதம், உலகுக்கும் - அரபு மொழிக்கும் அவர்கள் ஆற்றிய சேவை) எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தமைக்காக, M.Phil. பட்டம் வழங்கப்பட்டார். என்ற செய்தி அறிந்து மற்றற்ற மகிழ்ச்சி . அல்ஹம்துலில்லாஹ்.
வல்ல ரஹ்மான் மென்மேலும் அவரின் அறிவை விரிவாக்கி இன்னும் பல்வேறு ஆய்வுகளை அரங்கேற்றி தானும் , பிற மக்கள் அனைவரும் பலன்பெற பேரருள் பாலிப்பானாக ! ஆமீன் !
14. ألـف مبـــروك posted bySyed Muhammed Sahib SYS (Dubai)[28 February 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33418
ما شــاء الله
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது பாட்டனார் "மஹான் நஹ்வி முஹம்மது இஸ்மாயீல் ஆலிம் முப்தி" அவர்கள் ஆற்றிய சமுதாய சேவைகளை ஆய்ந்து அதன் மூலம் M.Phil பட்டயம் பெற்ற அன்பு தம்பி மௌலவி. ஹாபிள். அபூ தாஹிர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross