இவ்வாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அக்கட்சியின் - பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் முதல் கட்ட பிரச்சார தேதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன் படி - மார்ச் 3 துவங்கி ஏப்ரல் 5 வரை, 19 தொகுதிகளில் - முதலமைச்சர் - முதல் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். ஏப்ரல் 1 செவ்வாய்க்கிழமை அன்று தூத்துக்குடி வரும் ஜெயலலிதா, அண்ணா நகர் மெயின் ரோட்டில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
1. Re:... posted byhasbullah mackie (dubai)[25 February 2014] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33351
இந்த இடத்திற்கெல்லாம் சாதாரண வாகனத்தில் வருகிறாரோ அல்லது வான்வெளி மூலம் பிரயாணம் செய்ய போகிறாரோ தெரியவில்லை... மக்களின் வரி பணம் வீணாகி விட வேண்டாம்.
பாராளுமன்றம் நடக்க இருப்பதினால் தான் இவர்கள் எல்லாம் சுற்று பயணம் செய்கிறார்கள்.. இல்லையென்றால் ஒருவனும் அந்த இடத்தை எட்டி பார்க்க மாட்டார்கள்.. அம்மா அவர்கள் வீடியோ conference மூலம் திறந்து வைக்கிறார்கள். அதே போல தனது தோட்டத்தில் இருந்து கொண்டே voice conference மூலம் தேர்தல் பிரச்சாரம் நடத்திவிட்டால் செலவுகள் குறைவு...மக்களின் பணம் வீணடிப்பது குறையும்....
3. Re:...திட்டமிட்டால் வெற்றி நிச்சயம் posted bymackie noohuthambi (chennai)[25 February 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33365
யார் யார் எங்கே போட்டியிடுகிறார்கள், எந்த இடத்திலே தேர்தல் கூட்டம் நடைபெறும் எந்த நாளில் நடைபெறும் என்று இத்தனை தெளிவாக வியூகம் வகுத்து தேர்தல் தேதி அறிவிக்கு முன்னமே தனது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு சிறகை விரித்துப் பறக்கப் புறப்பட்டுள்ள முதல்வரை பாராட்டினால் சிலருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
அலகாபாத் நீதிமன்றம் இந்திரா காந்திக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்குகிறது. அதை ஜீரணிக்க முடியாத இந்திரா, அவசரகால நிலை பிரகடனம் செய்து இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார். ஆனால் அவரை அன்று எதிர்த்தவர்கள் பின்னர் அவரை இந்த நாட்டின் ஒரு துணிச்சல்மிக்க பிரதமர் என்று பாராட்டினார்கள் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று அழைத்து அரியாசனத்தில் அமர செய்தார்கள் அவர் எடுத்த முடிவு தவறானது ஆனாலும் அவரது துணிச்சலை உலகம் பாராட்டியது. ONLY THE FITTEST SURVIVE என்பது டார்வின் தியரி.
தெளிவான திட்டம் - விடாமுயற்சி - கடும் உழைப்பு -தன்னம்பிக்கை - இவை நான்கும் இருந்தால் வாய்ப்புகளுக்கு வானமே எல்லை என்பது இந்த 66 அகவையில் அடி எடுத்து வைக்கும் முதல்வரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இதில் கட்சி வேறுபாடு இல்லை.
4. அவசர கோலத்தில் எடுத்த முடிவு! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[26 February 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33372
அன்புக்குறிய நூஹுதம்பி காக்கா அவர்களுக்கு உங்கள் கருத்தோடு சிறிது கலந்துரையாட நாடி,உங்கள் கருத்துக்கு
இச்சிறியோனின் சிந்தனை சிதறல்களை சற்று தெளித்து இருக்கிறேன்.இது குற்றால சாரலே தவிர கொதிக்கும் நீர் அல்ல. சரிக்கு சரி என்ற சிந்தனைக்கு தயவு செய்து சென்றுவிடாதீர்கள்!
தெளிவான திட்டம் - விடாமுயற்சி - கடும் உழைப்பு -தன்னம்பிக்கை - இவை நான்கும் இருந்தால் வாய்ப்புகளுக்கு வானமே எல்லை "(C &P )
தெளிவான திட்டம்= அவசர கோலத்தில் எடுக்கும் முடிவாக நிச்சியம் இருக்காது!
விடாமுயற்சி= ஒரு காரியத்தை நிதானமாக சிந்தித்து அதை செயல்வடிவமாக்கச்செய்யும் தொடர் உழைப்பு.
க்டும் உழைப்பு= என்னுடைய முந்திய கம்பெனியின் மேலாளர் சொல்லுவார் Mr.சுல்தான்,ஒரு வேலையை கடினமாக உழைப்பவனைவிட அந்த வேலையை நிதானமாக சிந்தித்து,அதை விரும்பி அதோடு ஒரிங்கிணைந்து செய்பவனே மேல்,அவனிடம் ஒரு தவறு கூட நிகழாது.சில நேரங்களில் வேகமான கடின உழைப்பாளியிடம் கூட தவறுகள் நடக்க வாய்ப்புண்டு.
தன்னம்பிக்கை = அவசரத்திலோ,படபடப்பிலோ பிரசவமாவதில்லை.பலதடவை சிந்தித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவே நமக்கு எப்படியும் வெற்றிகிட்டும் என்ற எண்ணத்தின் இன்னொருபெயர் தான் தன்னம்பிக்கை.
இந்திரா காந்தியவர்கள் அவசர கோலத்தில் எடுத்த முடிவாகிய EMERGENCY யை பிரகடனபடுத்தியதால்,அவர் ஆட்சி காலம் முடிந்து சந்தித்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார் என்பதும் தாங்கள் அறியாத வரலாறு அல்ல!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross