காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு, இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அனுப்பியுள்ள கடிதத்தில், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில் வசதிகளை அதிகரிப்பதுடன், அறுவை சிகிச்சை மருத்துவர், மகப்பேறு மருத்துவர் உட்பட தேவைப்படும் கூடுதல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். |