அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - காயல்பட்டினம் கிளை சார்பில், தமிழக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம், இம்மாதம் 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
கட்சியின் நகர செயலாளர் எஸ்.எம்.செய்யித் காசிம், நிர்வாகிகளான பி.அந்தோணி, என்.எம்.அகமது, எம்.செந்தமிழ்ச் செல்வன், நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - அதிமுக ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் தலைமையுரையாற்றினார். கட்சியின் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஏ.செல்லத்துரை, திருச்செந்தர் ஒன்றிய செயலாளர் அமலி டி.ராஜன், ஒன்றிய செயலாளர் அம்மன் டி.நாராயணன், மாவட்ட பொருளாளர் எம்.ஜெபமாலை, ஆழ்வை ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.விஜயகுமார், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் மு.சுரேஷ் பாபு, மாவட்ட மகளிரணி தலைவரும், உடன்குடி பேரூராட்சி மன்ற தலைவருமான ஆயிஷா கல்லாசி உள்ளிட்டோர் பேசினர்.
தமிழக அரசின் வக்ஃப் வாரிய தலைவரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், அதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான அ.தமிழ்மகன் உசேன் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்ஜெட் விளக்க சிறப்புரையாற்றினார்.
பூந்தோட்டம் பி.மனோகரன் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மு.இராமச்சந்திரன் ஒருங்கிணைப்பில், கட்சியின் நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |