அரசு மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே இணக்கத்தை அதிகமாக்கும் பொருட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 'மருத்துவமனை நாள் விழா” ஆண்டுதோறும் நடத்திட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுப்படி, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு மருத்துவமனை நாள் விழா இன்று (பிப்ரவரி 26 புதன்கிழமை) 15.00 மணிக்கு, அரசு மருத்துவமனை கேளரங்கில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் உதவி மருத்துவர் ந.சரஸ்வதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆண்டறிக்கையை, தலைமைச் செவிலி விசாலாட்சி வாசித்தார்.
மருத்துவமனையை உள்ளடக்கிய - 15ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால், மருத்துவ உதவி அலுலவர் டாக்டர் கே.ஜெஃப்ரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிங்ஸ்டன், பல் மருத்துவர் டாக்டர் மு.அமுதா, உதவி மருத்துவர் ஹேமலதா, துணைச் செவிலி மு.சாந்தி, மருந்தாளுநர் ஸ்டீஃபன், காசநோய் சிகிச்சைப் பிரிவு மேற்பார்வையாளர் மு.பரமசிவன், உதவியாளர் ச.சேரந்தையன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
அரசு மருத்துவமனைக்கு தற்போது தேவைப்படும் வசதிகள் பற்றி விளக்கிப் பேசிய அவர்கள், ஆவன செய்து தருமாறு - விழாவிற்குத் தலைமை தாங்கிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் கோரினர்.
அதனைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகள் அனைத்தையும் விண்ணப்பமாகத் தருமாறும், தன்னாலான அனைத்து வழிகளிலும் அவற்றைப் பெற்றுத் தர ஆவன செய்வதாகவும் அவர் தனதுரையில் கூறினார்.
அலுவலக கண்காணிப்பாளர் இரா.சுந்தர கணேஷ் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள், உள்நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
படங்களில் உதவி:
தாஸ் ஸ்டூடியோ
2011ஆம் ஆண்டு நடைபெற்ற மருத்துவமனை நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |