ஜமாஅத்துல் அவ்வல் (1435) மாத அமாவாசை மார்ச் 1 வியாழக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 7:59 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் மார்ச் 1 மதியம் 1:29 மணி.
மார்ச் 1 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:29 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:32. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 5 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 3 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால்
காண இயலாது.
அன்று (மார்ச் 1) - பசிபிக் கடலின் வட பகுதியில் எளிதாகவும், கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளில் வானிலை
சூழல் தெளிவாக இருந்தால் எளிதாகவும், வட அமெரிக்க கண்டத்தின் இதர பகுதிகளில், தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதிகளில், மேற்கு
ஐரோப்பா பகுதியிலும், ஆப்ரிக்கா கண்டத்தின் வட மேற்கு கோடியிலும் - தொலை நோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம்.
மார்ச் 2 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:29 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:29. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 29 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 60 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால்
எளிதாக காணலாம்.
அன்று (மார்ச் 2) - உலகின் அநேக பகுதிகளில் எளிதாக பிறையை வெறுங்கண்ணால் காணலாம். ஆஸ்திரேலியா நாட்டின் தென் பகுதியில்
தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு - மார்ச் 2 - ஜமாஅத்துல் அவ்வல் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு மார்ச் 1 (அமாவாசை) அன்று ரபியுல்
ஆஹிர் 29 பூர்த்தி ஆகிறது. அன்று - பசிபிக் கடலின் வட பகுதியில் எளிதாகவும், கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தால் எளிதாக பிறையை காணலாம். அவ்வாறு காணகண்டால் - அவர்கள் மார்ச் 1 அன்று ரபியுல்
ஆஹிர் 29 பூர்த்தி செய்து, மார்ச் 2 அன்று ஜமாஅத்துல் அவ்வல் மாதம் துவக்குவர். மார்ச் 1 அன்று பிறை தென்படாவிட்டால் - அவர்கள் மார்ச் 2
அன்று ரபியுல் ஆஹிர் 30 பூர்த்தி செய்து, மார்ச் 3 அன்று ஜமாஅத்துல் அவ்வல் மாதம் துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு மார்ச் 1 (அமாவாசை) அன்று ரபியுல்
ஆஹிர் 28 பூர்த்தி ஆகிறது. எனவே அவர்கள் மார்ச் 2 அன்று ரபியுல் ஆஹிர் 29 பூர்த்தி செய்வர். மார்ச் 2 அன்று காயல்பட்டினத்தில் பிறையை
வெறுங்கண்ணால் எளிதாக காணலாம். எனவே அவர்கள் மார்ச் 3 அன்று ஜமாஅத்துல் அவ்வல் மாதம் துவக்குவர். மார்ச் 2 அன்று
மேகமூட்டம் காரணமாக பிறை தென்படவில்லையென்றால், அவர்கள் மார்ச் 3 அன்று ரபியுல் ஆஹிர் 30 பூர்த்தி செய்து, மார்ச் 4 அன்று
ஜமாஅத்துல் அவ்வல் மாதம் துவக்குவர்.
ரபியுல் ஆஹிர் 1435 மாத பிறை விபரங்களை காண இங்கு அழுத்தவும் |