மஹாராஷ்டிர மாநிலம் - புனே நகரிலுள்ள Students Development Society சார்பில், பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்கும் தேசிய அளவிலான கையெழுத்து மற்றும் வண்ணந்தீட்டும் போட்டிகள் நடைபெற்றன.
நாடு முழுவதிலுமிருந்து எல்.கே.ஜி. முதல் 09ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் - கையெழுத்துப் போட்டியில் 234 பேரும், வண்ணந்தீட்டும் போட்டியில் 398 பேரும் பங்கேற்றனர்.
கையெழுத்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 08ஆம் வகுப்பு மாணவி கே.ஆர்.கதீஜத் நூரிய்யா தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். அவருக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் பங்கேற்ற எல்.கே. மெட்ரிக் பள்ளியின் 8 மாணவியருக்கு கலா கவ்ரவ் 2013 விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற மாணவியர் விபரம் வருமாறு:-
கையெழுத்துப் போட்டி:
(1) ஓ.ஓவியா – 03ஆம் வகுப்பு
(2) ஜி.ஷாம்னி - 06ஆம் வகுப்பு
(3) கே.ஆர்.கதீஜத் நூரிய்யா – 08ஆம் வகுப்பு
வண்ணந்தீட்டும் போட்டி:
(4) எம்.ஜெய்ஸி கரோலின் – எல்.கே.ஜி.
(5) எம்.எம்.செய்யித் சுஹைல் - 01ஆம் வகுப்பு
(6) ஐ.கே.ஃபாத்திமா முகர்ரமா - 04ஆம் வகுப்பு
(7) எம்.ஆமினா ஃபரீதா - 05ஆம் வகுப்பு
(8) எம்.எஸ்.ஃபாத்திமா ஹமீதா - 09ஆம் வகுப்பு
இம்மாணவியருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிசு பெற்ற மாணவியரை பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |