இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் தாலுகா அளவில் தேர்தல் பணியாற்றவிருக்கும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தலைமையில், ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
தேர்தலையொட்டி அரசு மேற்கொண்டு வரும் ஏற்பாட்டுப் பணிகள் குறித்து அந்நிகழ்ச்சியில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதில், காயல்பட்டினத்திலிருந்து தேர்தல் பணிக்குச் செல்லவுள்ள பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
தகவல் & படங்கள்:
அஹ்மத் A.J.முஸ்தஃபா
ஆசிரியர் - எல்.கே.மேனிலைப்பள்ளி |