தமிழக அரசு உத்தரவின் படி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஏற்பாட்டில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், திருச்செந்தூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான பயிற்சி முகாம், பிப்ரவரி 24, 28 மற்றும் மார்ச் 01 ஆகிய நாட்களில், காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவிலுள்ள - குறுவள மையமான - தைக்கா பள்ளி என்றழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.
காயல்பட்டினம் எல்.கே.துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத் முகாமைத் துவக்கி வைத்து, தலைமையுரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், நகரின் துவக்கப்பள்ளிகளின் தலைமையாசிரியையர், ஆசிரியையர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில், பள்ளிகளிலும், மாணவர் கல்வி முன்னேற்றத்திலும் பள்ளி மேலாண்மைக் குழுவினரின் பங்கு, குழந்தைகளின் உரிமைகள், இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009, தரமான கல்வி ஆகிய தலைப்புகளில், த.ஜெயஸ்ரீ, சுபா ஜெனட், ஆனந்தி ஆகியோரால் கருத்துரையாற்றப்பட்டன.
துவக்கப்பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோர் மற்றும் ஆசிரியையர் இம்முகாமில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 08:26 / 01.03.2014] |