பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
பாகம் 2 காண இங்கு அழுத்தவும்
----------------------------------------------------
காயல்பட்டினம் நகராட்சிகான பிரத்தியேக குடிநீர் திட்டம் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான 80 சதவீத தொகையை (23 கோடியே, 80 லட்ச ரூபாய்) மத்திய அரசு வழங்குகிறது.
தலா 3 கோடி ரூபாயென, 10 சதவீத தொகையை மாநில அரசும், 10 சதவீத தொகையை நகராட்சியும் செலுத்தவுள்ளன. நகராட்சியின் பங்கும் -
மாநில அரசின் - IUDM திட்டம் மூலம் செலுத்தப்படும் என தெரிகிறது.
இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் - அக்டோபர் 22,2012 அன்று திறக்கப்பட்டு, சென்னையை சார்ந்த -
SHRIRAM EPC என்ற நிறுவனத்திற்கு வேலை ஆணைகள் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்றுவருகின்றன.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள வங்கி கணக்குகள் விபரப்படி - இரண்டாம் குடிநீர் திட்டத்திற்காக
இரண்டு வங்கி கணக்குகள், (காயல்பட்டினம் கிளை) இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துவக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வங்கி கணக்குகளின்
எண்கள் - 049101000024100 மற்றும் 049101000025002.
(1) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண் 049101000024100
வங்கி கணக்கு 049101000024100 - குறித்த விபரம் செப்டம்பர் 2012 முதல் டிசம்பர் 2012 காலவரையிலும், செப்டம்பர் 1, 2013 முதல் டிசம்பர்
17, 2013 காலவரையில் மட்டும் உள்ளது.
இந்த வங்கி கணக்கில் செப்டம்பர் 14, 2012 அன்று 2.5 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் 22, 2012 அன்று 96,920
ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 2013 - ஆகஸ்ட் 2013 காலகட்டத்திற்கான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
தொடர்ந்து அக்டோபர் 5, 2013 முதல் நவம்பர் 29, 2013 வரையிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் - காசோலை எண் 525110 மூலம் DIVISIONAL ENGINEER H என்ற பெயரில், அக்டோபர் 30, 2013 அன்று, 91 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது -
பொன்னன்குறிச்சியில் இருந்து 27 கிலோமீட்டர் நீளத்திற்கு, சாலையோரங்களில் குழாய் பதிக்கும் வகைக்காக - நெடுஞ்சாலைத் துறைக்கு
(HIGHWAYS) வழங்கப்பட்ட தொகையாக இருக்கலாம்.
காசோலை எண் 525114 மூலம், நவம்பர் 29, 2013 அன்று, இரண்டாம் குடிநீர் திட்ட ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுள்ள் SHRIRAM நிறுவனத்திற்கு 1 கோடி
ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி கணக்குக்கு சம்பந்தமே இல்லாமல், காயல்பட்டினம் நகராட்சியின் ஒப்பந்ததாரர் தலவாணிமுத்துவிற்கு - 3 காசோலைகள்
வழங்கப்பட்டுள்ளன.
**** அக்டோபர் 5, 2013 அன்று காசோலை எண் 525111 மூலம் 3,63,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
**** அக்டோபர் 29, 2013 அன்று காசோலை எண் 525112 மூலம் 4,15,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
**** நவம்பர் 27, 2013 அன்று காசோலை எண் 525113 மூலம் 8,41,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் 16 லட்சத்து, 19 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
(2) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண் 049101000025002
இந்த வங்கி கணக்கில் செப்டம்பர் 27, 2012 அன்று 6 கோடியே, 67 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 2012 - ஆகஸ்ட் 2013 காலகட்டத்திற்கான விபரங்கள் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து செப்டம்பர் 1, 2013 முதல் டிசம்பர் 17, 2013
வரையிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 1, 2013 அன்று, இந்த கணக்கில், துவக்க நிலை தொகை - 1 கோடியே, 53 லட்சத்து,
94 ஆயிரத்து, 821 ரூபாய், 50 பைசா ஆகும். இக்காலகட்டத்தில் - இக்கணக்கில் இருந்து (காசோலை எண்கள் மூலம் 525201,525202,525203)
சுமார் 5 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் இல்லை.
செப்டம்பர் 7, 2013 அன்று காசோலை எண் 525204 மூலம் 1,42,080 ரூபாய் - SGS INDIA PVT LTD என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கும், இந்த நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு தெரியவில்லை.
காசோலை எண் 525205 மூலம், நவம்பர் 29, 2013 அன்று இரண்டாம் குடிநீர் திட்ட ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுள்ள் SHRIRAM நிறுவனத்திற்கு 1
கோடியே, 45 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
[தொடரும் ...]
----------------------------------------------------
பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
பாகம் 2 காண இங்கு அழுத்தவும்
|