காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வறை நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும் நிகழ்ச்சி, இன்று (மார்ச் 01) காலை 11.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். முன்னிலை வகித்த - பள்ளியின் ஆட்சிக்குழு துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், ஆட்சிக்குழு உறுப்பினர்களான எல்.கே.லெப்பைத்தம்பி, எல்.டி.இப்றாஹீம், பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி, அவர்களின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் மற்றும் ஆசிரியர்கள் அஹ்மத் ஏ.ஜெ.முஸ்தஃபா, செய்யித் முஹ்யித்தீன் ஆகியோர் மாணவர்களுக்கு நிறைவுநாள் அறிவுரைகளை வழங்கினர்.
இருக்கும் எஞ்சிய சில நாட்களில், நேரத்தை வீணாக்காமல், நடத்தப்பட்ட பாடங்களை நல்ல முறையில் மீளாய்வு செய்து, தேர்வில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று மாணவர்கள் வெற்றிபெற வேண்டுமெனவும், மாநில - மாவட்ட அளவுகளில் சாதனைகள் பலவற்றைப் புரிய வேண்டுமெனவும், அதற்காக அனைவரையும் வாழ்த்திப் பிரார்த்திப்பதாகவும் - நிகழ்ச்சியில் பேசியோர் தமதுரையில் கூறினர்.
நிறைவில், நடப்பாண்டு 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வெழுதவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வறை நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்பட்டது.
தேர்வெழுதவுள்ள மாணவர்கள் அனைவரும், பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
தகவல் & படங்கள்:
அஹ்மத் A.J.முஸ்தஃபா
ஆசிரியர் - எல்.கே.மேனிலைப்பள்ளி |