காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில் அமைந்திருக்கும் ஹிழுறு பெண்கள் தைக்காவின் மீலாத் விழா, மழலையரின் மனங்கவர் நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியுள்ளது.
இம்மாதம் 23, 24 நாட்களில் மீலாத் விழா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது. 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு ஆண்கள் உபசரிப்பு நிகழ்ச்சி, குருவித்துறைப் பள்ளியின் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர் தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதினார். தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று ஸலாம் பைத் பாடினர். எஸ்.எச்.சொளுக்கு வரவேற்புரையாற்றினார்.
முத்துச்சுடர் மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.செய்கு முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேடையில் அங்கம் வகித்த அனைவருக்கும் தைக்கா நிர்வாகத்தின் சார்பில், சாளை ஏ.கே.மஹ்மூத் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
கடைப்பள்ளியின் இமாம் எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. ஏ.எல்.முஹம்மத் நிஜார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 14 முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவியருக்கான மவ்லித் போட்டி, 10 முதல் 13 வயதுக்குட்பட்டோருக்கான வினாடி-வினா போட்டி, 7 முதல் 10 வயதுக்குட்பட்டோருக்கான - தஜ்வீதுடன் குர்ஆனைப் பார்த்து ஓதும் போட்டி, பெரியவர்கள் பங்கேற்ற திருக்குர்ஆனின் குறிப்பிட்ட அத்தியாயங்கள் மனனப் போட்டி ஆகிய சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.
நிறைவில், போட்டிகளில் வென்ற, பங்கேற்ற அனைத்து மழலையருக்கும், சிறுவர்-சிறுமியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகள் அனைத்திற்கான ஏற்பாடுகளையும், ஹிழுறு பெண்கள் தைக்காவின் மஹ்மூது மாநபி மீலாது விழாக்குழு பொறுப்பாளர் சாளை எம்.புகாரீ தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
சாளை M.புகாரீ
அப்பாபள்ளித் தெரு |