தமிழக அரசின் சார்பில், மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சிப் பகுதிகளிலும் வெவ்வேறு வகையான குடிநீரை ஆய்வு செய்து, ஆய்வறிக்கைகளின் படி - பொதுமக்கள் உடல் நலனைக் காப்பதற்கான மேல் நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன், இந்தியாவிலேயே முதன்முறையாக குடிநீர் பாதுகாப்பு வாரத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதற்கான சிறப்புக் கூட்டம், காயல்பட்டினம் நகராட்சியில், இம்மாதம் 24ஆம் நாள் 15.00 மணியளவில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
அரசின் இத்திட்டத்தின் படி, காயல்பட்டினத்திலுள்ள 18 வார்டுகளிலிருந்தும் கிணறு, ஆழ்குழாய் கிணறு, அடிபம்பு குடிநீர் உள்ளிட்ட குடிநீராதாரங்களின் மாதிரிகளைத் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இன்று மாதிரி பரிசோதனை செய்ய இறுதி நாளாகும். இன்று காலை 11.00 மணி நிலவரப்படி, வார்டுகள் வாரியாக பெறப்பட்ட குடிநீர் மாதிரிகளின் எண்ணிக்கை வருமாறு:-
வார்டு 01 – 1
வார்டு 02 – 5
வார்டு 03 – 6
வார்டு 04 - -
வார்டு 05 – 7
வார்டு 06 – 18
வார்டு 07 - -
வார்டு 08 - -
வார்டு 09 - -
வார்டு 10 - -
வார்டு 11 – 4
வார்டு 02 - -
வார்டு 13 – 8
வார்டு 14 - -
வார்டு 15 - -
வார்டு 16 – 2
வார்டு 17 - -
வார்டு 18 – 16
பெறப்பட்ட குடிநீர் மாதிரிகள், அதற்கென நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியையரால், நகர்மன்றக் கூட்டரங்கில் பரிசோதித்து, அறிக்கை ஆயத்தம் செய்யப்பட்டது.
|