| 
  
  
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வறை நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும் நிகழ்ச்சி, இன்று (மார்ச் 03) காலை 9.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
  
இந்நிகழ்ச்சியில் - ஹாஜி ஆர்.எஸ். அப்துல் காதர், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லதீப், ஹாஜி வி.எஸ்.எஸ். முஹைதீன் தம்பி, ஹாஜி ஏ.கே. கலீலுர் ரஹ்மான் ஆகியோர்  மாணவர்களுக்கு பிரார்த்தனை செய்து, அவர்களின் தேர்வறை நுழைவு சீட்டினை  வழங்கினர்.
  
இவ்வாண்டு இப்பள்ளியில் இருந்து 26 மாணவர்களும், 14 மாணவியரும் என 40 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
  
தகவல்: 
K.M.T.சுலைமான், 
துணைச் செயலாளர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி.
  |