இந்திய ரிசர்வ் வங்கி - 2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிட்டு வெளியிட்ட ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து வாபஸ் வாங்க முடிவு செய்து - ஐனவரி 22 அன்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதில் -
இந்திய ரிசர்வ் வங்கி - மார்ச் 31, 2014 க்கு பிறகு, 2005 ஆம் ஆண்டிற்கு முன் அச்சிட்டு வெளியிடப்பட்ட அனைத்து இந்திய ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் வாங்கி விடும். இந்திய ரிசர்வ் வங்கி - மார்ச் 31, 2014 க்கு பிறகு, 2005 ஆம் ஆண்டிற்கு முன் அச்சிட்டு வெளியிடப்பட்ட அனைத்து இந்திய ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் வாங்கி விடும். ஏப்ரல் 1, 2014 க்கு பிறகு, பழைய (2005 க்கு முன்னர் அச்சிடப்பட்ட) நோட்டுகளை, வங்கிகளை அணுகி மாற்றிக்கொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இது குறித்த மேலறிவிப்பு வரும் வரை, வங்கிகள் ரூபாய் நோட்டுகளை மாற்றி வழங்கும்.
பொது மக்கள் 2005 ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகளை எளிதாக கண்டறியலாம். 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு அச்சிடப்பட்ட நோட்டு ரூபாய் நோட்டுகளின் பின் பக்கத்தின் அடியில், அச்சிடப்பட்ட ஆண்டு இருக்கும்.
என தெரிவித்திருந்தது.
ஜனவரி 22 அறிவிப்பினை திருத்தி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் - ரிசர்வ் வங்கி,இதற்கான கால அவகாசத்தை - ஜனவரி 1, 2015 வரை நீட்டித்துள்ளது.
|