திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கூட்டத்திற்கு பிறகு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கியுள்ளதாக அக்கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்திருந்தார். இருப்பினும் எந்த தொகுதி என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இன்றும் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. அதன் முடிவில் - அக்கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் - வேலூர் தொகுதி, முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதே தொகுதியை தான் - கடந்த பாராளுமன்ற தேர்தலில், இக்கட்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் - கடந்த முறை உதய் சூரியன் சின்னத்தில் நின்ற இக்கட்சி, இம்முறை தனது ஏணி சின்னத்தில் நிற்க உள்ளதாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. தி மு க வா..? முஸ்லீம் லீக்கா ..? சீட்டு போர் முடிவுக்கு வந்து விட்டது... இனி தான் சஸ்பென்ஸ்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33536
மிக இழுப்பறிக்கு மத்தியில் தான் இத்தொகுதி (வேலூர் தொகுதி) தி மு க கூட்டணி மூலம் முஸ்லிம் லீக் கட்சிக்கு கிடைத்துள்ளது ஆகையால் வெற்றி வாய்ப்பு என்பது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது..!
தி மு க வின் முக்கிய ஆளான துரை முருகன் அவர்களின் அன்பு மகனுக்கு இத்தொகுதியை ஒதுக்க துரை முருகன் அவர்கள் கடினமாக முயற்சி செய்ததாக செய்தி உலா வருகிறது - தற்போது முஸ்லிம் லீக் கட்சிக்கு கிடைத்துள்ளது.
தி மு க காரர்கள் எப்படி தேர்தல் களத்தில் இறங்கி முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியில் வேலை செய்வார்கள் என்ற சந்தேகமும் எனக்கு தோன்றுகிறது..
பொறுத்து இருந்து பார்ப்போம்.. எல்லாம் நண்மையாக அமைய பிராத்திப்போம்..
2. Re:...நெஞ்சுக்கு நீதி posted bymackie noohuthambi (chennai)[06 March 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33538
அவர் விரும்பிய வேலூர் இல்லை என்றாலும் தான் விரும்பும் நெல்லை என்றாலும் தொல்லை தராத கூட்டணி முஸ்லிம் லீக் என்பதை கலைஞர் உணர்ந்து கொண்டார். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போகமாட்டான் கெட்டுப் போகிறவன் விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதை பேராசிரியர் கலைஞருக்கு உணர்த்தியுள்ளார்.
நெஞ்சுக்கு நீதி எழுதியவர் அதை செயலிலும் காட்ட வேண்டும் அல்லவா...சில முடிவுகளை மறுபரிசீலனை செய்வதில் பிடிவாதமாக இருக்கக் கூடாது என்பதை கடந்த கால நிகழ்வுகள் கலைஞருக்கு சொல்லியிருக்கிறது. வெற்றிக் கூட்டணி என்று முழங்கியவர்கள் இன்று செய்வதறியாது முடங்கி கிடக்கிறார்கள். சுத்தியலும் அரிவாளும் கருப்பு வெள்ளை சிவப்பு துணிக்குள் துவண்டு கிடக்கிறது.
தாமரை தடாகதுக்குள் புரட்சிப் புறா விழுந்து கிடக்கிறது. முரசு கொட்ட தெரியாமல் தப்பு தாளம் போட்டு முரசு வேறு கம்பு வேறாக பிரிந்து கிடக்கிறது. கூட்டி கழித்து பார்த்தால் வேகமாக ஓடிய முயல், அசைந்து அசைந்து செல்லும் ஆமைக்கு வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.
நமக்கும் மேலே ஒருவனடா.. அவன் நாலும் அறிந்த தலைவனடா.. தினம் நாடகம் ஆடும் கலைஞனடா . ..நாடகமே உலகம்... நாளை நடப்பதை யார் அறிவார்.
முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்... அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன். இது ஞானம் பெற்றிருப்பவர்களுக்கும் தெரியவில்லை ஞான தேசிகனுக்கும் புரியவில்லை... வாழ்க இந்திய ஜன நாயகம். ஜெய் ஹிந்த்!
3. வெற்றி பெற ஒற்றுமையாக உழைப்போம், துஆ செய்வோம்! posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[06 March 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33539
ஒரு வழியாக தொகுதி, முடிவாகி விட்டது. தம்பி முத்து இஸ்மாயீல் சொல்லுவது போல், துரைமுருகனின் மகனுக்காக எதிர்பார்க்கப்பட்ட தொகுதி. ஆனால், தி.மு.க தலைமை சொல்லுக்கு கட்டுப்பட்டு, உளப்பூர்வமாக வேலை பார்பார்த்து வெற்றிக்காக உழைப்பார் என்று நம்புவோம்.
இப்போது இந்த அணியில், முஸ்லிம் லீக் மற்றும் ம.ம.க ஆகிய முஸ்லிம் கட்சிகள் உள்ளது. இதுநாள் வரை, இன்னொரு முஸ்லிம் பேரியக்கமான, த.த.ஜ அமைப்பினர், ம.ம.க எந்த அணியில் இருக்கிறதோ, அதற்கு எதி அணியில் தான் இருந்தனர்.
தேர்தலுக்கு பின், அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், த.த.ஜ அமைப்பினர், தங்களது இயக்க எதிர்ப்பை கைவிட்டு இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரமும் பண்ணுவார்கள் என்று எதிபார்க்கலாம்.
வல்ல அல்லாஹ், நம்மிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி, நம் சமுதாயத்தை வலு பெற செய்வானாக பிரார்த்திப்போம். ஆமீன்.
4. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[06 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33542
அஸ்ஸலாமு அழைக்கும் ,
ஒரு தொகுதிக்குதான் இத்தனை பாடு அதில் கூட்டணி உடன்படிக்கை ஒரு பாடு மற்றொன்று தொகுதி உடன் பாடு .
துரை முருகனின் மகனை கட்சி நிராகரித்து விட்டது இப்படி தி . மு . க தலைவர்களின் வாரிசுகள் நிறைய நிராகரிகபட்டுள்ளனர் விதி விளக்காக ஓரிரு வாரிசுகளுக்கு சீட்டு கொடுக்க வாய்புகள் இருக்கலாம் .
மற்றபடி வேலூரில் முஸ்லிம் லீக்க்கு பெரிய அளவில் சிக்கல் இருக்க வாய்புகள் குறைவு .
துரை முருகனை பொறுத்த வரை கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு திட்டம் போடுவது வெற்றிக்காக பாடுபடுவது அவருடைய முக்கிய பணியாக இருக்கும்.
ஆனால் முஸ்லிம் லீக் தங்கள் உழைப்பை சரியான முறையாக ஆற்ற வேண்டும் சமுதாய வாக்கு சிந்தாமல் சிதறாமல் இருக்க கவனம் காட்டணும் . அது சமையம் மாற்று மத மக்களின் மீது அதிக கவன செலுத்தி பாடுபடணும் .
இந்த வேலூர் தொகுதில முஸ்லிம் லீக்கோடு , அம்மா , பிஜேபி அகியவர்களுக்கிடைல போட்டி இருந்தால் நன்றாக இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross