காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஆண்கள் பிரிவிற்கான 35ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா, 21.02.2014 அன்று நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஆண்கள் பிரிவிற்கான 35ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா, 21.02.2014 வெள்ளிக்கிழமை மாலையில், பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ தலைமை தாங்கினார். பள்ளியின் நிறுவனர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், துணைத்தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஹாஜி எம்.எம்.சுல்தான், ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எஸ்.டி.லபீப், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப், தாளாளர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் முதல்வர் டி.ஸ்டீஃபன் ஆண்டறிக்கை வாசித்தார். திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.சுவாமிதாஸ் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன், சாதனை மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பின், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை, பள்ளி செயலாளர் ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் ஷம்சுத்தீன், துணைச் செயலாளர்களான கே.எம்.டி.சுலைமான், என்.எம்.எம்.அப்துல் காதிர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
பெண்கள் பிரிவிற்கான ஆண்டு விழா, 22.02.2014 சனிக்கிழமை மாலையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஹாஜ்ஜா எம்.எம்.மைமூன் மர்யம் தலைமை தாங்கினார். ஹாஜ்ஜா வாவு ஜெய்னப், ஹாஜ்ஜா எம்.எஸ்.ஷேக் ஃபாத்திமா, ஹாஜ்ஜா எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் ஃபாத்திமா என்ற சின்னாத்தா, ஹாஜ்ஜா எம்.ஏ.கே.ராழியா, எம்.எஸ்.கிதுரு ஃபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்கள் பிரிவின் தலைமையாசிரியை மெஹர் பானு ஆண்டறிக்கை வாசித்தார். வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சசிகலா இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன், சாதனை மாணவியருக்கு பரிசுகளையும் வழங்கினார். மஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பின், மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்வாறு, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற 34ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |