காயல்பட்டினம் நகர அதிமுக கிளை சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், இம்மாதம் 26ஆம் நாள் புதன்கிழமை 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் வரவேற்றுப் பேசினார்.
கட்சியின் நகர செயலாளர் எஸ்.எம்.செய்யித் காசிம், கட்சி நிர்வாகிகளான அருணாச்சல கனி, என்.பி.முத்து, எம்.எல்.இல்யாஸ், சமுத்திரக்கனி, இளந்தளிர் முத்து, என்.எஸ்.முஹம்மத் அலீ, நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், கே.விஜயகுமார், மு.இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் கவிஞர் இளையகவி, மீனவரணி இணைச் செயலாளர் வெண்பாவூர் தேவராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நகர சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எஸ்.எம்.அப்துல் காதர் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை, நகர சிறுபான்மைப் பிரிவு தலைவர் என்.எம்.அகமது தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் செய்திருந்தனர். |