பாகம் 1 காண இங்கு அழுத்தவும்>>
--------------------------------------------------------------------------------
இந்திய ரயில்வே - உலகின் மிக பெரிய ரயில் சேவைகளில் ஒன்றாகும். சராசரியாக தினமும் - இந்திய ரயில்வே மூலம் சுமார் 2.5 கோடி பேர்
பயணம் செய்கின்றனர். 15 லட்சம் ஊழியர்கள் இதில் பணிபுரிகின்றனர்.
2011-12 நிலவரப்படி, நாட்டில் ஏறத்தாழ 8500 ரயில் நிலையங்கள் உள்ளன. அவை அனைத்தும் - A1, A, B, C, D, E, F என ஏழு பிரிவுகளாக ஆண்டுதோறும் ஈட்டப்படும் பயணியர் மூலமான வருவாய் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களை பயணியர் மூலமான வருவாய் மூலம் பிரிக்க - ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த
கடைசி ஆய்வு, செப்டம்பர் 2012 இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 2011-12 ஆம் ஆண்டின் வருவாய் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. வருவாய் அளவும், அதற்கான ரயில் நிலைய பிரிவும் கீழே தரப்பட்டுள்ளது.
மேலே காணப்படும் விபரப்படி -
-- ஆண்டுக்கு 60 கோடி ரூபாய்க்கு மேலே வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள், A1 பிரிவு என்றும்,
-- ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள், A பிரிவு என்றும்,
-- ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள், B பிரிவு என்றும்,
-- பொது மேலாளர் முடிவுப்படி - சுற்றுலாத் தளங்களில் உள்ள ரயில் நிலையங்கள், முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்கள் ஆகியவை B பிரிவு
என்றும்,
-- நகர்ப்புறங்களில் உள்ளூர் ரயில் சேவை வழங்கும் (SUBURBAN) ரயில் நிலையங்கள் C பிரிவு என்றும்,
-- ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள், D பிரிவு என்றும்,
-- ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய்க்கும் குறைவான வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள், E பிரிவு என்றும்,
-- இதர ரயில் நிலையங்கள் (Halts) F பிரிவு என்றும்
பிரிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 729 ரயில் நிலையங்களில்,
A1 பிரிவின் கீழ் - 8 ரயில் நிலையங்களும்,
A பிரிவின் கீழ் - 42 ரயில் நிலையங்களும்,
B பிரிவின் கீழ் - 25 ரயில் நிலையங்களும்,
C பிரிவின் கீழ் - 75 ரயில் நிலையங்களும்,
D பிரிவின் கீழ் - 85 ரயில் நிலையங்களும்,
E பிரிவின் கீழ் - 352 ரயில் நிலையங்களும்,
F பிரிவின் கீழ் - 142 ரயில் நிலையங்களும் உள்ளன.
செப்டம்பர் 19, 2007இல் கேட்கப்பட்டு, நவம்பர் 15, 2007 அன்று கிடைக்கபெற்ற - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான பதிலில், திருச்செந்தூர் -
திருநெல்வேலி மார்க்கத்தில் உள்ள - காயல்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களும் E பிரிவைச் சார்ந்தவை என தென்னக ரயில்வேயால் - காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு -
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் - அப்போது நடைமுறையில் இருந்த விதிமுறைகள்படி, ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய்க்கு கீழ் இருந்த ரயில்
நிலையங்கள் E பிரிவை சார்ந்தவையாக கருதப்பட்டன. தற்போது அது - 60 லட்ச ரூபாய்க்கு கீழ் என மாற்றப்பட்டுள்ளது.
தற்போதைய காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் வருமானம் 60 லட்ச ரூபாய்க்கும் கீழ் எனவும், எனவே அது E பிரிவின் கீழ் வருவதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே துறையைப் பொருத்த வரை, இந்தப் பிரிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களுக்கு, அவை
இடம்பெற்றுள்ள பிரிவுகள் அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க, அத்துறை விதிமுறைகள் (Comprehensive instructions for provision of Passenger Amenities at Stations) சொல்கின்றன.
தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளைக் காண இங்கு அழுத்தவும்>>
ரயில்வே துறை - பிரிவுகள் வாரியாக ரயில் நிலையங்களுக்கு வழங்கும் வசதிகளை, மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. அவை -
(1) குறைந்தபட்ச இன்றியமையாத வசதிகள் (MINIMUM ESSENTIAL AMENITIES)
(2) பரிந்துரைக்கப்பட்ட வசதிகள் (RECOMMENDED AMENITIES)
(3) விரும்பத்தக்க வசதிகள் (DESIRABLE AMENITIES)
(1) குறைந்தபட்ச இன்றியமையாத வசதிகள் (MINIMUM ESSENTIAL AMENITIES)
இந்திய ரயில்வே - தனது கீழ் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும், அவை சார்ந்த பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்ச வசதிகளை
வழங்கும் என உறுதி கூறுகிறது. பிரிவுகள் வாரியாக ரயில் நிலையங்களுக்கு வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச வசதிகளை கீழே காணவும்:
இந்த அட்டவணைப் படி, காயல்பட்டினம் ரயில் நிலையம் - E பிரிவின் கீழ் வரும் பட்சத்தில், அதற்கு -
டிக்கெட்டுகள் பதிவு செய்யும் வசதி, குடிநீர் வசதி, காத்திருப்புக் கூடம், நடைமேடையில் அமரும் வசதி, நடைமேடை மேற்கூரை, சிறுநீர் கழிப்பிடம்,
மலசலம் கழிப்பிடம், தண்டவாள அளவிலான (RAIL LEVEL) நடைமேடை, மின்விளக்கு வசதி, மின்விசிறி வசதி, கால அட்டவணை, கடிகாரம் ஆகியன வழங்கப்பட வேண்டும்.
D பிரிவின் கீழ் வரும் பட்சத்தில் - கூடுதலாக தண்டவாள அளவு (RAIL LEVEL) நடைமேடைக்குப் பதிலாக நடுத்தர அளவு (MEDIUM LEVEL)
நடைமேடை, நீர்க்குளிரி வசதி, நடை பாலம் ஆகியவை வழங்கப்படவேண்டும்.
காயல்பட்டினம் ரயில் நிலையம் E பிரிவின் கீழ் வருவதால், அதற்கு வழிகாட்டு விதிமுறைகள் படி, தண்டவாள அளவு நடைமேடைகள்தான்
வழங்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் - குறுகிய இருப்புப்பாதை, அகண்ட இருப்புப்பாதையாக புதுப்பிக்கப்படும் (GAUGE CONVERSION)
ரயில்நிலையங்களில் - நடுத்தரமான நடைமேடைகள் வழங்கவேண்டும் என்ற இந்திய ரயில்வேயின் 26.04.2005 தேதிய சுற்றறிக்கையின் படி,
காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு நடுத்தர அளவு நடைமேடை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இந்திய ரயில்வேயின் 6.7.2012ஆம் நாளது சுற்றறிக்கை, நடுத்தர அளவு நடைமேடை நிறுவப்படும் ரயில் நிலையங்களிலும், வருங்காலங்களில்
அவற்றை உயர்ந்த நடைமேடைகளாக எளிதாக மாற்றிட - உயர்ந்த நடைமேடைக்கான அடித்தளத்தோடு நிறுவவேண்டும் என
தெரிவிக்கிறது.
(2) பரிந்துரைக்கப்பட்ட வசதிகள் (RECOMMENDED AMENITIES)
வருவாய் குறைவாக இருந்தும், அதிகமான பயணியர் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் போதுமானதாக பல நேரங்களில் இருக்காது என்பதால் - இந்திய ரயில்வே, பரிந்துரைக்கப்பட்ட வசதிகள் (RECOMMENDED AMENITIES) என்ற விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி பிரிவுகள் வாரியாக ரயில் நிலையங்களுக்கு வழங்கப்படவேண்டிய பரிந்துரைக்கப்பட்ட வசதிகளை கீழே காணவும்:
(3) விரும்பத்தக்க வசதிகள் (DESIRABLE AMENITIES)
இந்திய ரயில்வே - பயணியர் திருப்தியாக ரயில் நிலையத்தைப் பயன்படுத்த, விரும்பத்தகுந்த வசதிகள் என சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி பிரிவுகள் வாரியாக ரயில் நிலையங்களுக்கு வழங்கப்படவேண்டிய விரும்பத்தக்க வசதிகளைக் கீழே காணவும்:
இதில் E பிரிவு ரயில் நிலையங்களில், கட்டண கழிப்பிடங்கள், ATM வசதி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர - ரயில் நிலையங்களில் இருக்கவேண்டிய வெளிச்ச அளவையும், இந்திய ரயில்வே பரிந்துரைக்கிறது.
இரு பாகங்களாக வெளிவந்த இந்த செய்திகளில் நாம் கண்ட தகவல்களின் படி, சுருக்கமாக சிலவற்றை நாம் இறுதியாகக் கூறலாம்.
ரயில் நிலையங்களைப் பொருத்த வரை - அவற்றில் வழங்கப்படும் நடைமேடைகளின் நீளம் (LENGTH OF THE PLATFORM) - அங்கு வந்து நிற்கும் - மிக நீண்ட ரயிலின் நீளத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும். அந்த ரயில் நிலையம் எந்த பிரிவைச் சார்ந்ததாக இருந்தாலும் சரியே.
ஆகவே - நடைமேடையை நீட்டிக்க காயல்பட்டினம் மக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கை - இந்திய ரயில்வே வழங்கவேண்டிய அத்தியாவசிய சேவைதானே தவிர சலுகையல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.
மேலும் - E பிரிவைச் சார்ந்த காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு, 2 பதிவு முகப்பு (Booking Counter), 2 குழாய்கள் மூலம் குடிநீர் வசதி, 15 சதுர மீட்டர் அளவில் காத்திருப்புக் கூடம், 10 இருக்கைகள் கொண்ட நடைமேடை இருப்பிடம், 50 சதுர மீட்டர் அளவில் நடைமேடை மேற்கூரை (2012க்கு முன், இப்பிரிவில் நிழல் தரும் மரங்கள் மட்டும் அனுமதி), 1 சிறுநீர் கழிப்பிடம், 1 மலசலம் கழிப்பிடம் ஆகியவை வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச வசதிகள் ஆகும்.
[முற்றும்]
--------------------------------------------------------------------------------
பாகம் 1 காண இங்கு அழுத்தவும்>> |