Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:36:19 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13066
#KOTW13066
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 20, 2014
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2283 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ராஜீவ் கொலை வழக்கில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய இடைக்காலத் தடை விதித்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுவிக்கத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இவர்களை விடுவிப்பது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், குற்றவாளிகள் 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனையை குறைத்தல் என்ற தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனு நிலுவையில் உள்ள நிலையில், சிறையில் இருந்து குற்றவாளிகள் விடுவிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

மத்திய அரசின் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் நடவக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில், நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கை மார்ச் 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதனிடையே, 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் காட்டமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்ததன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. .வெட்கக்கேடு!
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [20 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33268

இந்த நாட்டில் என்ன கோமாளித்தனம் நடக்குது?ஒண்ணுமே புரியலையே? கொடூர கொடிய கொலையாளிகளின் கதை உலகமகா விஷியமாக விமர்சிக்கப்படுகிறேதே? வெட்கக்கேடு!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வெட்கத்தோடும்,வேதனையோடும்
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [20 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33270

அஸ்ஸலாமு அழைக்கும் ,

ஜெயா இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் தரம் தாழ்ந்த அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்.

இந்த மாநிலத்தில் சற்று அதற்கான வாய்ப்பு உள்ளது ஆனால் இதன் மூலம் தான் இந்தியாவுகான பிரதமர் என்ற அந்த சிறிய துருப்பு சீட்டை இழந்து விட்டார் .

மூன்றாவது அணியாகட்டும் அல்லது மற்ற எந்த அணியாக இருக்கட்டும் இந்திய அளவில் இவரிடம் நம்பகத்தன்மை இல்லை என்பதை நன்கு அறிவார்கள் ஆனால் என்ன செய்வது தேர்தல் என்று வரும் போது அவற்றை சிந்த்திதால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை எல்லா கச்சிகளுக்கும் வருவதுதான் அதுதான் நம்முடைய இந்திய தேர்தல் சூழ்நிலை சந்தர்ப்ப வாத கூட்டணி ( கூத்தணி ) என்பது இதட்கு எந்த கட்சிகளும் விதிவிலக்கு அல்ல .

இந்த அம்மையார் எடுக்கும் கடுமையான சில நிலைபாடுகள் சில முடிவுகள் சிலசமையம் தேவைதான். ஆனால் இது போன்ற சட்டம் சார்ந்த விசயங்களில் சந்தர்பத்தை பார்த்து நிதானித்து வார்த்தைகளை விடாமல் ஆனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டிய நடவடிகைகளை எடுக்கலாம் .

இவர் செய்வது தமிழ் நாடுக்கு வேண்டுமானால் சற்று உதவலாம் ஆனால் இந்திய அளவில் இதனை பார்க்கும் போது ஒன்றும் சரிவராது அதையும் தாண்டி ஜெயாவுக்கு சரிவைதான் கொடுக்கும் . அம்மா தமிழ் நாடு தனிநாடானால் அதற்கு பிரதமராவார் இவருடைய பல செயல்பாடுகள் மோடியை மறைமுகமாக ஆதரிப்பதாகதான் உள்ளது .

மத்திய அரசுக்கு இவர் கொடுத்துள்ள மூன்றுநாள் கெடு நல்ல அருமையான அரசியல் விளையாட்டுதான் நல்ல பொழுது போகியாக மாறியுள்ளார் .

வாய்தா ராணி இதன் மூலம் fபாய்தா அடையலாம் என்று பார்கிறார் சற்று வாசிபடும் நம் தமிழ் மண்ணில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அம்மாக்கு அவமானம். தமிழக மக்கள் தலை குனிவு.!
posted by s.s.md meerasahib (TVM) [20 February 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 33271

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை. அம்மாவின் அவசர கோலத்திற்கு கிடைத்த மூக்கொடைப்பு. பொறுத்திருந்து சம்மந்தப்பட்ட அனுபவமிக்க வழக்கறிஞர்களிடம் கலந்து கொள்ளாமல் எடுத்தேன்...... கவிழ்த்தேன். அவரின் சர்வாதிகார வழமையான போக்கை கையாண்டதால் வந்த வினை. மத்திய அரசுக்கு மூன்று நாள் ஜெ. கெடு.!!! யார் ஜெயிப்பார் பார்க்கலாம். ஜெ.வா? நீதி மன்றமா? ஜெ.க்கு தொடர்ச்சியாக மூக்கு உடைக்கப்படும் சம்பவம்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved