தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், இன்று (பிப்ரவரி 19) இரவு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
எமதன்பின் தாய்லாந்துவாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது தக்வா மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 19.02.2014 புதன்கிழமை (இன்று) மஃரிப் தொழுகைக்குப் பின், பாங்காக் SINCERE LANKA இல்லத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் அனைவரும், இச்செய்தியையே முறையான அழைப்பாகக் கருதி அவசியம் கலந்துகொள்ள வருமாறும், உங்களுக்கறிமுகமான அனைத்து காயலர்களையும் இதில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான்,
பாங்காக், தாய்லாந்து. |