காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை ஏற்பாட்டில் - எதிர்வரும் பிப்ரவரி 22, சனிக்கிழமை அன்று, காலை 9:30 மணி முதல் மாலை 4:00 வரை, மனங்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. துளிர் காணொளி கூடத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
60 பேருக்கான இடங்களே உள்ளன. மதிய உணவுடன் - அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விரும்புவோர், முன் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.
முன் பதிவு தொடர்புக்கு: 04639 280215, 284 662
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:30 am / 19.02.2014] |