காயல்பட்டினம் சதுக்கைத் தெரு, அர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில், நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாள் விழா, அர்ரஹீம் மீலாதுர்ரஸூல் குழுவின் 27ஆம் ஆண்டு துவக்க விழா ஆகிய இருபெரும் விழாக்கள், இம்மாதம் 15, 16 (சனி, ஞாயிறு) தேதிகளில் நடைபெற்றன.
15.02.2014 சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு, ஜன்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்கா அருகில் - மஹான் ஸூஃபீ ஹழ்ரத் காஹிரீ ரலியல்லாஹு அன்ஹு திடலில், மக்தப் முஹ்யித்தீன் மத்ரஸா மாணவ-மாணவியரின் இரண்டாமாண்டு சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
16.02.2014 அன்று அதிகாலை 06.15 மணிக்கு, ஜன்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்காவில், அஹ்மத் நெய்னார் பள்ளியின் இமாம் பாளையம் அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. காலை 08.30 மணிக்கு, கே.எஸ்.முஹம்மத் தாஹா தலைமையில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மக்தப் முஹ்யித்தீன் மத்ரஸா மாணவ-மாணவியரின் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அன்று மாலை 04.30 மணிக்கு, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் தலைமையில் மீலாது விழா பேரணியும், மக்தப் மாணவர்களின் தஃப்ஸ் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மஃரிப் தொழுகைக்குப் பின், கலீபா எஸ்.இ.ஷெய்கு நூருத்தீன் தலைமையில் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின், ஹாஃபிழ் தல் ஜெ.ஏ.அஹ்மத் சுலைமான் கிராஅத் ஓத, அதனைத் தொடர்ந்து, மவ்லவீ எஸ்.டி.செய்யித் இஸ்மாஈல் மஹ்ழரீ, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ ஆகியோரால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
ஆசிரியர் இசட்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் நன்றி கூற, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் இமாம் மவ்லவீ எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் மஸ்லஹீ துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
விழா நிகழ்ச்சிகளில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் தபர்ருக் எனும் நேர்ச்சை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அர்ரஹீம் மீலாதுர்ரஸூல் குழுவினர் செய்திருந்தனர்.
அர்ரஹீம் மீலாதுர்ரஸூல் குழுவின் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட முப்பெரும் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |