பொருளாதாரத்தில் நலிவுற்ற - காயல்பட்டினத்தைச் சேர்ந்த 30 பேருக்கு ரூபாய் 800 செலவில் மாதந்தோறும் உணவுப் பொருட்கள் வழங்கவும், அலுவலக கட்டிடத்தை ரூபாய் 30 ஆயிரம் செலவில் சீரமைக்கவும், காயல்பட்டினம் பைத்துல்மால் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
நமது காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுக் கூட்டம், செயலாளர் ஹாஜி எஸ்.எம்.ஹஸன் மரைக்கார் தலைமையில், எமது செயலகத்திலுள்ள கூட்டரங்கில், இம்மாதம் 15ஆம் நாள் சனிக்கிழமை 20.00 மணிக்கு நடைபெற்றது.
அறங்காவலர் ஹாஜி ஏ.எச்.நெய்னா ஸாஹிப் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அறங்காவலர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - நலிவுற்றோருக்கு மாதாந்திர உணவுப் பொருட்கள்:
நலிவுற்றோர் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 30 நபர்களின் மாதாந்திர திட்ட உதவியைப் புதுப்பிக்கவும், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2015 வரை ரூபாய் 800 செலவில் மாதந்தோறும் உணவுப்பொருட்கள் வழங்கவும் இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 2 – அலுவலக கட்டிட சீரமைப்பு:
பைத்துல்மால் செயலக கட்டிட சீரமைப்பு வகைக்காக ரூபாய் 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து, இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இனி வரும் காலங்களில் கல்வி மற்றும் நலிவுற்றோர் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஹாஃபிழ் கே.எம்.என்.முஹம்மத் அபூபக்கர் துஆவைத் தொடர்ந்து ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. பொருளாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர், அறங்காவலர்கள் ஹாஜி வி.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஆசிரியர் S.M.அஹ்மத் சுலைமான்
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் முந்தைய கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |