எல்.கே.மேனிலைப்பள்ளி 10ஆம், 12ஆம் வகுப்புகளுக்கு விரைவில் நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுக்கு, பள்ளி மாணவர்களை ஆயத்தப்படுத்துவது குறித்து, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகிகள் - ஆசிரியர்கள் கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. ஆட்சிக்குழு உறுப்பினர்களான எல்.கே.லெப்பைத்தம்பி, ஆடிட்டர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை தாங்கிய பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் ஆகியோர் - மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், ஆசிரியர்களான அஹ்மத் ஏ.ஜெ.முஸ்தஃபா, செய்யித் முஹ்யித்தீன் ஆகியோர், ஆசிரியர்கள் சார்பாக பேசினர்.
இக்கூட்டத்தில் மாணவர்கள் தேர்வு நலன் கருதி பல்வேறு செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தகவல் & படங்கள்:
அஹ்மத் A.J.முஸ்தஃபா
ஆசிரியர் - எல்.கே.மேனிலைப்பள்ளி |