நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
2014- 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அமெரிக்க, ஐரோப்போ, ஜப்பான் , சீனா போன்ற நாடுகளுக்கு உள்ளது போல பொருளாதார நெருக்கடி சூழல் இந்தியாவுக்கும் இருக்கிறது. இருப்பினும் இந்தியாவின் பொருளாதாரம் சீரான நிலையில் சிறப்பாக உள்ளது. 2013 - 14 ல் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 4.6 சதமாக உள்ளது. ஏற்றுமதியும், இறக்குமதியும் மீண்டு வந்து கொண்டு வருகிறது. கணிசமாக உயர்ந்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை 45 பில்லியன் டாலராக உள்ளது. இரும்பு, சிமென்ட், மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக சிறு தொழிற் கூடங்கள் அதிகரித்துள்ளன. 20 ஆயிரம் கி.மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. நாட்டின் வறுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. பண வீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக பண மதிப்பு சற்று குறைந்தது. எண்ணெய் ,எரிவாயு துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
உணவு பொருள் பணவீக்கம் கவலை அளிப்பதாக உள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. 67 சதிவீத நிலக்கரி உற்பத்தி 554 டன்னாக அதிகரித்துள்ளது. 7 புதிய விமான நிலையங்கள் கட்டுமான பணியில் இருந்து வருகிறது. 296 புதிய திட்டங்கள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. சுகாதாதர துறை பணிக்கான நிதி ஒதுக்கீடு காரணமாக அபார நன்மை பெற்றுள்ளது. உணவு தானிய உற்பத்தி , சென்னை- பெங்களூரை இணைக்கு சரக்கு பாதை பணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். செவ்வாய்கிரகம் ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது பெருமைக்குரியது. கடந்த 10 ஆண்டில் 2 லட்சத்து , 34 ஆயிரத்து 600 மெகா வாட் மின்சார உற்பத்தி உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி கடந்த 10 ஆண்டில் 6.2 சதம் எட்டியுள்ளது.
சென்னைக்கு தொழிலக சாலை:
சென்னை - பெங்களூரூ, பெங்களூரூ - மும்பை, அமிர்தசரஸ் - கோல்கட்டா இடையிலான தொழிலக சாலைகள் உருவாக்கப்படும்.
57 கோடி பேருக்கு ஆதார் கார்டு :
சோலார் அமைப்பு இரண்டாவது கட்டத்தில் இறங்கியிருக்கிறோம். ஒரு மில்லியன் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டமிட்டுளோம். கூடங்குளம் அணு உலை மூலம் மின் உற்பத்தி பெருக்கப்பட்டுள்ளது. மற்றும் கல்பாக்கம் மூலம் மின்சாரம் பெறும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. வரும் ஆண்டில் 4 சோலார் மின் ஆலைகள் அமைக்கப்படும். புதிய நில மசோதா உருவாக்கியுள்ளோம். ஆதார் கார்டு திட்டம் மூலம் பலரை வங்கி கணக்கில் இணைத்துள்ளோம். 57 கோடி பேருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆதார் கார்டு முழுமை அடைய முழு நடவடிக்கை எடுத்து வருகிறோம். உணவு மானியத்திற்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவத்தில் இளைஞர்கள் அதிகம் படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் ஒன் ரேங் ஒன் பென்சன் என்ற திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளோம்.
10 கோடி பேருக்கு வேலை :
அரசும், ரிசர்வ்வங்கிகியும் போதிய நடவடிக்கை எடுத்து பண வீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. உணவு, உரம் மற்றும் எரிபொருள் மானியத்திற்கு 2லட்சத்து 46 ஆயிரத்து 397 கோடி ஒதுக்கீடு, கான்ட்ராக்ட் தொடர்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பரிந்துரைத்துள்ளேன். தொழிற்சாலை மூலம் வரும் 10 ஆண்டில் 10 கோடி பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதமாகவும், ஐ.மு., கூட்டணி இரண்டாம் ஆட்சியில் 6. 6 சதமாகவும் இருந்தது. தேசிய வேளாண் வளர்ச்சி கொள்கை துவக்கப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், சமையல் காஸ் விஷயத்தில் நேரடி மானிய திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பினும், இவை விரைவில் சீர்செய்யப்படும்.
பாதுகாப்பு துறைக்கான நிதியை 10 சதம் அதிகரித்துள்ளோம். வரும் நிதி ஆண்டில் 2.24 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். ரயில்வேக்கு 29 ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளோம். குடிநீர் 15 லட்சத்து 260 கோடி , கடந்த ஆண்டில் 43 லட்சத்து 52 ஆயிரம் புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. 2009 மார்ச் 31 க்கு முன்னதாக வங்கிமூலம் கல்விக்கடன் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான வட்டிச்சலுகை அளிக்கப்படுகிறது. இதன் க்கடன் மூலம் 9 லட்சம் பேர் பயன் பெறுவர். சிறுபான்மை மக்களுக்கென 2 லட்சத்து 11 ஆயிரத்து 451 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 ஆயிரத்து, 207 புதிய வங்கிகள் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் எட்டாயிரம் வங்கி கிளைகள் துவக்க திட்டமிட்டுள்ளோம். திட்டமில்லா செலவுக்கு 12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டு மொத்த திட்டச்செலவு ரூ,. 5 லட்சத்து 55ஆயிரத்து 322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை 4. 6 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநில வளர்ச்சிக்கு ஆயிரத்து 200 கோடி. சரக்கு சேவை வரி அமல்படுத்தப்படாமல் இருப்பது கவலை அளிக்கிறது. இதற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புதிய வரிகள் எதுவுமில்லை:
கார்- மற்றும் பைக் உற்பத்தி வரி குறைப்பு , மருத்துவ சேவைக்கு வரி குறைப்பு ,நெல்லுக்கான சேவை வரி நீக்கம், நடுத்தர கார் உற்பத்தி 24 சதவீத்தில் இருந்து 20 சதமாக குறைப்பு, சிறுகார்கள் உற்பத்தி வரி 12 சதவீதத்தில் இருந்து 8 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. சுங்கவரி 12 சதவீதத்தில் இருந்து 10 ஆக குறைப்பு, மொபைல் போன் வரி குறைப்பு, சோப்பு, டி.வி., பிரிட்ஜ் வரி குறைப்பு, அரிசிக்கு சேவை வரிஇல்லை, வருமான வரியில் எவ்வித மாற்றமுமில்லை. நுகர்வோர் பொருள் வரி 12 சதத்திலிருந்து 10 சதமாக குறைப்பு , ரத்த வங்கி சேவை வரி முழுமையாக நீக்கம், பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா நிதிக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு , இன்னும் 7 மின் அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மேம்பாடு துறைக்கு 82 ஆயிரத்து 2002 கோடி ஒதுக்கீடு,
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு; மனித வள மேம்பாடு அமைச்சகத்திற்கு ரூ.67,398 கோடி ஒதுக்கீடு; திட்டமிடாத செலவுகளுக்காக 5 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு; குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு ரூ.15,260 கோடி; சமூக நீதி மற்றும் அதிகாரத்துறைக்கு ரூ.6730 கோடி.
இவ்வாறு தனதுரையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மொத்த செலவீனம் 17 லட்சத்து 63 ஆயிரத்து 214 கோடி : மொத்த வருவாய், 17 லட்சத்து 63 ஆயிரத்து 214 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய் வரவு, 11 லட்சத்து 67 ஆயிரத்து 131 கோடி ரூபாய் மற்றும் மூலதன வருவாய், 5 லட்சத்து 96 ஆயிரத்து 83 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த செலவீனக் கணக்கும் 17 லட்சத்து 63 ஆயிரத்து 214 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டு, திட்டமிடப்பட்ட செலவாக, 5 லட்சத்து 55 ஆயிரத்து 322 கோடி ரூபாய் எனவும், திட்டமிடப்படாத செலவில் 12 லட்சத்து 7 ஆயிரத்து 892 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 3 லட்சத்து 82 ஆயிரத்து 923 கோடி ரூபாய், நிதி பற்றாக்குறை, 5 லட்சத்து 28 ஆயிரத்து 631 கோடி ரூபாய் மற்றும் முதன்மை பற்றாக்குறை 1 லட்சத்து 1 ஆயிரத்து 83 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தகவல்:
தினமலர்
புகைப்படங்கள்:
PRESS INFORMATION BUREAU |