1. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[17 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33197
அஸ்ஸலாமு அழைக்கும் ,
விஸ்டம் பப்ளிக் பள்ளியின் மாணவர் சேர்க்கை அறிவிப்பில் ஆங்கிலம் மட்டும்தான் பயிற்று விற்கபடுகிறது என்று கூறியுள்ளார்கள் அப்படியானால் தாய் மொழிக்கு ஒரு பாடம் கூட இல்லை என்று நினைக்க முடிகிறது .
எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம் அது நமக்கு நல்லது பயன்படும் ஆனால் யாறாக இருந்தாளும் சரி அவருடைய தாய் மொழில் ஒரு பாடம் இல்லை என்றால் அந்த குழந்தை சிந்திக்கும் ஆற்றல் குறைவான குழந்தையாக தான் பொதுவாக இருக்கும்.
அதனால் ஒரு பாடமானாலும் அது நல்ல தாய் மொழிப்பாடம் இருந்தால்தான் அவர்கள் படிக்கும் மற்ற மொழி மற்றும் பலதரப்பட்ட பாட முறைகள் அந்த மாணவர்களுக்கு புறிந்து கொண்டு படிப்பதாக இருக்கும் .
மனிதன் சிந்தனை செய்வது இயல்பாகவும் , பொதுவாகவும் தாய் மொழியின் மூலம் கிறகித்து , உணர்ந்து அதனை உணர்வு பூர்வமாக உணர்ந்து கூற முடியும் எனவே இந்த பள்ளியின் நிவாகம் தாய் மொழிக்கும் முழு கவனம் கொடுக்க வேண்டும் .
தரமான மற்றும் சிந்தனை செய்யும் மாணவர்களை இதன் மூலம்தான் உருவாக முடியும் சிந்தனையை தூண்டும் கல்வி என்பது மட்டும் தான் கல்வி மற்றவைகள் தாளில் வரையப்பட்ட சுரைக்காய்தான் . உப்புசப்பு இல்லாத கல்வியாகதான் அமையும் .
தமிழ் ஒரு பாடம் இந்த பள்ளியில் இல்லை என்றால் அதனை இணைக்க பாருங்கள் நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross