காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை சார்பில், ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதம் பிறை 01 முதல் 14 வரை, மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவாக கந்தூரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
காலை நிகழ்ச்சிகள்:
அதனடிப்படையில், நடப்பாண்டு கந்தூரி நிகழ்ச்சிகள் இம்மாதம் 02ஆம் நாளன்று துவங்கி, 15ஆம் நாளுடன் நிறைவுற்றது. இந்நாட்களில் தினமும் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், மவ்லித் மஜ்லிஸும் நடத்தப்பட்டது.
இரவு தொடர் சொற்பொழிவு:
05.02.2014 புதன் கிழமை முதல் 13.02.2014 வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் 20.45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
05.02.2014 புதன்கிழமையன்று, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, “ஆன்மிக மேதை அப்துல்லாஹில் காதிரிய்யில் பகுதாதீ (ரலி)” என்ற தலைப்பிலும்,
06.02.2014 வியாழக்கிழமையன்று, காயல்பட்டினம் குத்பா சிறிய பள்ளியின் கத்தீபும் - ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, “உயர்ந்தோன் அல்லாஹ்வின் உன்னத நல்லடியார்கள்” எனும் தலைப்பிலும்,
07.02.2014 வெள்ளிக்கிழமையன்று, முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூமன்சூர் மஹ்ழரீ, “முத்திரை நபியின் முத்திரை” எனும் தலைப்பிலும்,
08.02.2014 சனிக்கிழமையன்று, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.எம்.எம்.யாஸர் அரஃபாத் மஹ்ழரீ, “அருள்மறை பார்வையில் அண்ணல் நபியின் அற்புதங்கள்” எனும் தலைப்பிலும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபழ் என்.ஏ.ஜி.ஷெய்கு இஸ்மாஈல் ஃபைஜீ, “மாமறையில் மறைந்துள்ள மகத்தான முத்துக்கள்” எனும் தலைப்பிலும்,
09.02.2014 ஞாயிற்றுக்கிழமையன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, “ஹதீஸ் ஒளியில் அண்ணலார் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பிலும்,
10.02.2014 திங்கட்கிழமையன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ, “சத்திய ஸஹாபாக்களின் தியாகம்” எனும் தலைப்பிலும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ, “அஹ்லு பைத்துந் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)” எனும் தலைப்பிலும்,
11.02.2014 செவ்வாய்க்கிழமையன்று, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ, “இஸ்லாமிய பார்வையில் விருந்தும் - விருந்தினர்களும்” எனும் தலைப்பிலும்,
12.02.2014 புதன்கிழமையன்று, குத்பா பெரிய பள்ளியின் கத்தீபும் - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, “இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள்” எனும் தலைப்பிலும்,
13.02.2014 வியாழக்கிழமையன்று, மவ்லவீ எல்.ஓ.முஹம்மத் அலீ மஹ்ழரீ ஃகலீஃபத்துல் காதிரீ மற்றும் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஆகியோர், “குத்பிய்யா கஸீதாவும், குத்பு நாயகமும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
கந்தூரி நாள் நிகழ்ச்சிகள்:
கந்தூரி நாளான 14.02.2014 வெள்ளிக்கிழமையன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. கந்தூரி நிகழ்ச்சிக்கு வருகை தரும் மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, மஹ்ழரா அமைந்துள்ள அம்பல மரைக்கார் தெரு சாலை முழுக்க பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மஃரிப் தொழுகைக்குப் பின், மவ்லவீ கலீஃபத்துல் காதிரீ எல்.ஓ.எம்.முஹம்மத் அலீ மஹ்ழரீ தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றன.
துஆ பிரார்த்தனை:
அன்று 20.30 மணி முதல் 21.30 மணி வரை துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. உலக சமாதானம், ஊர் ஒற்றுமை, கொள்கை பிடிப்பு, நோயற்ற வாழ்வு, மனித நேய மலர்ச்சி, குடும்ப உறவுகள், மார்க்கக் கல்வியின் மீது ஆர்வம் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ துஆ இறைஞ்சினார்.
இந்நிகழ்வுகள் அனைத்திலும், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு மஹ்ழராவையொட்டிய தென்பகுதியில் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
நேர்ச்சை விநியோகம்:
15.02.2014 சனிக்கிழமையன்று (இன்று) ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், ஃபாத்திஹா துஆவுடன் நேர்ச்சை வினியோகம் துவங்கி, காலை 08.30 மணிக்கு நிறைவடைந்தது.
கந்தூரி விழா நிகழ்ச்சிகளனைத்தும், காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியில் நேரலை செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஹ்ழரா நிர்வாகிகளும், கந்தூரி கமிட்டி நிர்வாகிகளுமான ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா, ஹாஜி ஏ.கே.கலீலுர்ரஹ்மான், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
K.J.ஷாஹுல் ஹமீத்
மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |