Excellent Exams என்ற அமைப்பு நடத்திய தமிழ் கையெழுத்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 128 மாணவியர் பங்கேற்றனர்.
தமிழ் மாணவர் மன்றத் தேர்வில் பத்தாம் வகுப்பு பயிலும் 40 மாணவியர் பங்கேற்றனர். அவர்களுள் எம்.ஏ.கே.சித்தி மதனீ, எம்.எஸ்.சூர்ய ப்ரபா ஆகிய இரு மாணவியருக்கு இளம் தமிழறிஞர் விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
கையெழுத்துப் போட்டியில், 03ஆம் வகுப்பு மாணவி எம்.ஏ.ஃபாத்திமா, 04ஆம் வகுப்பு மாணவி எம்.ஐ.ஆயிஷா பீவி, 05ஆம் வகுப்பு மாணவி எம்.ஆர்.ஃபாத்திமா முஸ்ஃபிரா, 06ஆம் வகுப்பு மாணவி எஸ்.ஏ.சேகு ஸஜீலா, 07ஆம் வகுப்பு மாணவி எம்.ஏ.ஜெய்னப் ஜாதிரா, 08ஆம் வகுப்பு மாணவி கே.ஆர்.கதீஜா நூரிய்யா, 09ஆம் வகுப்பு மாணவி எம்.எம்.நூர் ஃபஸ்லா ஆகியோர் விருது மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
அனைத்துப் போட்டிகள் மற்றும் தேர்வுகளில் பங்கேற்ற மாணவியர் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சாதனை மாணவியரை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். |