அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உயிர் காப்போம்’ உதவித் திட்ட வகைக்காக, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவியரால் ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
“அநாதைகளை ஆதரிப்பவரும், ஏழைகளுக்கு உணவளிப்பவரும் சுவர்க்கத்தில் என்னுடன் (தனது இரு விரல்களையும் நெருக்கமாகக் காண்பித்து, அதுபோல) நெருக்கமாக இருப்பார்கள்” -நபிமொழி.
காயல்பட்டினம் அரிமா சங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உயிர் காப்போம்’ உதவித் திட்டத்திற்காக, எம் பள்ளி மாணவியர் சார்பில் ரூபாய் 25 ஆயிரத்து 361 தொகை சேகரிக்கப்பட்டது. இத்தொகைக்கான காசோலையை அரிமா சங்க நிர்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி, இன்று (பிப்ரவரி 14) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் பொறுப்பாசிரியையரான கா.காதர் உம்மு ஷிஃபா, எஸ்.எஸ்.அஜ்மீர் ஆகியோர் முன்னிலையில், பள்ளியின் தலைமையாசிரியை மு.ஜெஸீமா - காயல்பட்டினம் அரிமா சங்க பொறுப்பாளர்களான ஹாஜி ஏ.ஆர்.இக்பால், ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, யு.முஹம்மத் நவ்ஃபல் ஆகியோரிடம் வழங்கினார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |